ADDED : மார் 27, 2026 05:28 AM

பெங்களூரு: உத்தர பிரதேசத்தில் நடக்கும் நெட்பால் போட்டியில் சாதிக்க, கர்நாடக அணி தயாராக உள்ளது.
உத்தர பிரதேசத்தின் மீரட்டில் மூன்று நாட்கள் நடக்கும், 4 வது ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி இன்று துவங்குகிறது. இதில் கர்நாடகா சார்பில் ஆண்கள், பெண்கள் அணி பங்கேற்கிறது.
சாம்ராஜ்நகரின் சேத்தன் கேப்டனாக உள்ள அணியில், துணை கேப்டனாக விவேக் உள்ளார். அக் ஷய், தன்மய் கவுடா, சாத்விக், வருண், ரவிராஜ், ருத்ரபிரசாத், முத்துராஜ், ஆர்யன் ஆகிய வீரர்கள் இடம் பிடித்து உள்ளனர்; பயிற்சியாளராக ரோகித் உள்ளார்.
பெண்கள் அணிக்கு பெங்களூரின் இந்து தலைமை தாங்குகிறார். தன்வி துணை கேப்டனாக உள்ளார். தீப்தி, லிகிதா, நித்யஸ்ரீ, பலாக், சுப்ரியா, நிவேதிதா, ஹரிபிரியா, திஷா ஆகிய வீராங்கனைகள் உள்ளனர். சஹானா பயிற்சியாளராக உள்ளார்.
நெட்பால் என்பது இரு அணிகள் தலா 7 வீரர்களுடன், செவ்வக வடிவ மைதானத்தில் விளையாடும் போட்டி ஆகும். குறுகிய மைதானத்தில் பந்தை கையாண்டு கோல் போடும் விறுவிறுப்பான குழு விளையாட்டாக உள்ளது. பந்தோடு சேர்ந்து ஓட கூடாது. நிற்கும் இடத்தில் இருந்தே 3 வினாடிகளுக்குள் பந்தை பாஸ் செய்ய வேண்டும்.

