ADDED : பிப் 06, 2026 05:45 AM

- நமது நிருபர் -
காயத்தில் இருந்து மீண்ட கிரிக்கெட் வீரர் கருண் நாயர், கர்நாடக அணியில் மீண்டும் இணைந்துள்ளார்.
நம் நாட்டின் பல நகரங்களில் நடந்து வந்த, ராஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. கால் இறுதி போட்டியில் கர்நாடக அணி இன்று மும்பையை எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில், மூத்த வீரரும், அனுபவ பேட்ஸ்மேனுமான கருண் நாயர் மீண்டும் இடம் பிடித்து உள்ளார். மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியின் போது, இடது கையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது, அணியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது, காயத்தில் இருந்து மீண்டு இருப்பதால் அணியில் இடம் கிடைத்து உள்ளது. அவர் அணிக்கு திரும்பி இருப்பது பேட்டிங் பலத்தை அதிகரித்து உள்ளது.
தேவ்தத் படிக்கல் கேப்டனாக இருக்கும், கர்நாடக அணியில் மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், கருண் நாயர் உள்ளிட்ட வீரர்கள் இடம்பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

