ADDED : ஆக 14, 2025 11:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: மல்லேஸ்வரம் டேபிள் டென்னிஸ் சங்கத்தால் நடத்தப்பட்ட, டேபிள் டென்னிஸ் பைனல் போட்டியில் நாகர் சித்தாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.
பெங்களூரு மல்லேஸ்வரம் டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில், 13 வயதுக்கு உட்பட்டோருக்கான, மாநில அளவிலான ஐந்தாவது ஆண்டு டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை நடந்த அரை இறுதி போட்டியில் வெற்றி பெற்ற, பெங்களூரின் நாகர் சித்தாந்த், அர்னவ் மிதுன் ஆகியோர் இறுதி போட்டிக்கு முன்னேறினர்.
இறுதி போட்டியில் 11 - 7; 11 - 8; 11 - 8 என்ற நேர்செட் கணக்கில் அர்னவ் மிதுனை வீழ்த்தி, நாகர் சித்தாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

