ADDED : ஏப் 11, 2025 06:46 AM

மைசூரு: இந்திய மூத்த தடகள கூட்டமைப்பு சார்பில் 44வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் மைசூரில் இம்மாதம் 21 முதல் 23ம் தேதி வரை நடக்கிறது.
இது தொடர்பாக, மைசூரில் கூட்டமைப்பு தலைவர் ரங்கநாத் அளித்த பேட்டி:
இந்திய மூத்த தடகள கூட்டமைப்பு சார்பில் 44வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் மைசூரில் உள்ள சாமுண்டி விஹார் மைதானத்தில், இம்மாதம் 21 முதல் 23ம் தேதி வரை நடக்கிறது.
பல மாநிலங்களை சேர்ந்த 30 வயதுக்கு உட்பட்ட 1,500க்கும் மேற்பட்ட சிறந்த தடகள வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில், அர்ஜுனா, துரோணாச்சார்யா, பத்ம விருதுகள் பெற்ற சிறந்த வீரர்கள், ரயில்வே, இந்திய ராணுவம், பொது நிறுவனங்களில் பணியாற்றுவோர் பங்கேற்கின்றனர்.
இந்திய தடகள கூட்டமைப்பு, உலக தடகள கூட்டமைப்பு வகுத்துள்ள விதிகள்படி இப்போட்டிகள் நடக்கும். வெற்றி பெறுவோருக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.