சின்னசாமியில் ஐ.பி.எல்., துவக்க போட்டி ஆர்.சி.பி., அணி ரசிகர்கள் உற்சாகம்
சின்னசாமியில் ஐ.பி.எல்., துவக்க போட்டி ஆர்.சி.பி., அணி ரசிகர்கள் உற்சாகம்
ADDED : மார் 13, 2026 06:03 AM

- நமது நிருபர் -: நாட்டின் பல நகரங்களில், ஐ.பி.எல்., எனும் இந்தியன் பிரிமியர் லீக், 19வது சீசன் போட்டிகள் நடைபெற உள்ளன. துவக்க போட்டி வரும், 28ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. நடப்பு சாம்பியனான ஆர்.சி.பி., எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
கடந்த ஆண்டு ஆர்.சி.பி., அணி கோப்பை வென்றதை கொண்டாடும் போது, சின்னசாமி மைதானம் முன் ஏற்பட்ட கூட்ட நெரி சலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதனால், சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்த, அரசு தடை விதித்தது. கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் வெங்கடேஷ் பிரசாத், அவரது குழுவினர் மேற்கொண்ட தொடர் முயற்சியால், சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடத்த அரசு அனுமதி கொடுத்தது. மைதானத்தில் நுழைவுவாயில் பகுதி அகலப்படுத்தப்பட்டு உள்ளது.
பெங்களூரில் ஐ.பி.எல்., கிரிக்கெட் நடக்குமோ, நடக்காதோ என்ற ஏக்கத்தில் இருந்த, ஆர்.சி.பி., ரசிகர்களுக்கு, துவக்க போட்டியே இங்கு நடக்க இருப்பது மகிழ்ச்சி அளித்து உள்ளது. தங்கள் ஆதர்ஷ நாயகன் விராட் கோலியை, எப்போது மீண்டும் பார்ப்போம் என்று, ஆவலாக உள்ளனர். 'ஈ சாலவு கப் நமதே' என்று பேச ஆரம்பித்து உள்ளனர்.
பட் டி தொட்டிகளில் எல்லாம், ஐ.பி.எல்., ஜுரம் பற்ற ஆரம்பித்து உள்ளது. சாலையோர கடைகளில், ஆர்.சி.பி., அணி டி சர்ட் விற்பனையும் துவங்கி உள்ளது.
கடந்த ஆண்டு ந டந்த துயரத்தை மறந்து விட்டு, ஆர்.சி.பி., அணியை ஆதரிக்க ரசிகர் பட்டாளம் தயாராக உள்ளது.
