கொடவா குடும்ப ஹாக்கி சாம்பியன்ஷிப் முத்தண்ணாவை வீழ்த்தியது சில்லவந்தா
கொடவா குடும்ப ஹாக்கி சாம்பியன்ஷிப் முத்தண்ணாவை வீழ்த்தியது சில்லவந்தா
ADDED : ஏப் 04, 2025 07:05 AM

குடகில் நடந்து வரும் கொடவா குடும்ப ஹாக்கி போட்டியில், முத்தண்ணா அணியை, 2 - 0 என்ற கணக்கில் தோற்கடித்து, சில்லவந்தா அணி வெற்றி பெற்றது.
குடகு மாவட்டத்தில் கொடவா குடும்ப ஹாக்கி போட்டி நகரின் மார்ஷல் கே.எம்.கரியப்பா கல்லுாரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், பல்வேறு அணியினர் பங்கேற்றுள்ளனர்.
நேற்று முன்தினம் சில்லவந்தா அணிக்கும், முத்தண்ணா அணிக்கும் இடையே போட்டி நடந்தது. ஆரம்பத்தில் இருந்தே சில்லவந்தா அணியினர் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடினர். ஆட்டத்தின் இறுதியில், சில்லவந்தா அணி 2 - 0 என்ற கணக்கில், முத்தண்ணா அணியை தோற்கடித்தது. ராஷின் சுப்பையாவுக்கு ஆட்டத்தின் சிறந்த விளையாட்டு வீரர் விருது வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து, கோனியண்டா - கல்லுமண்டண்டா ஆகிய இரு அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் போட்டி போட்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இறுதி வரை எந்த அணியும் கோல் போடவில்லை. அதன்பின் நடந்த 'டை பிரேக்கர்' பிரிவில், கோனியண்டா அணி, 6 - 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதுபோன்று பட்டமடா அணி 3 - 0 பொன்ஜண்டாவையும்; முத்தியாதா அணி 3 - 0 சிம்மனமடாவையும்; போலியாதிரா அணி 3 - 0 பெம்முடியண்டாவையும்; கொண்டிரா அணி 2 - 0 பெரியண்டாவையும்; கஞ்சிதண்டா அணி 2 - 0 பொன்னகச்சிராவையும்; மெவடா அணி 4 - 0 சரிமண்டாவையும்; மல்லண்டா அணி 5 - 0 கொலதண்டாவையும் வீழ்த்தின - நமது நிருபர் -.