sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 21, 2026 ,சித்திரை 8, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஸ்பெஷல்

/

ஆடுகளம்

/

 சதுரங்கத்தில் சாதிக்க துடிக்கும் சுஷாந்த்

/

 சதுரங்கத்தில் சாதிக்க துடிக்கும் சுஷாந்த்

 சதுரங்கத்தில் சாதிக்க துடிக்கும் சுஷாந்த்

 சதுரங்கத்தில் சாதிக்க துடிக்கும் சுஷாந்த்


ADDED : ஏப் 17, 2026 04:56 AM

Google News

ADDED : ஏப் 17, 2026 04:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -: உலக அரங்கில் சதுரங்க விளையாட்டுகளில், நம் நாட்டை சேர்ந்தவர்கள் முன்னிலையில் இருக்கின்றனர். குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் என நம் நாட்டை சேர்ந்த பல வீரர்கள் உலகளவில் சதுரங்கத்தில் சாதித்து வருகின்றனர். இவர்களை போலவே தானும் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் சுற்றித்திரியும் இளம் வேங்கை ஒன்று உள்ளது.

அந்த வேங்கையின் பெயர் தான் சுஷாந்த் ஷெட்டி. 16 வயதேயான இளம் வேங்கை. பார்ப்பதற்கு அப்பாவி போல இருப்பான். ஆனால், ஆட்டம் என்று வந்து விட்டால் அனலை கக்கும் டிராகனாக மாறிவிடுவான். ஆம்... மங்களூரை சேர்ந்த சுஷாந்த், சிறு வயதில் இருந்தே சதுரங்கம் விளையாடி வருகிறான்.

அதிசயம் இவன் ஏகலைவன் போல யாரிடமும் சென்று பயிற்சி பெறாமல், தானாகவே கற்றுக்கொண்டான். இவனே மொபைல் போனில் வீடியோ பார்த்து, விளையாட்டாக விளையாட்டை விளையாட துவங்கினான். விளையாட்டு வினையாகும் என்பது போல, சுஷாந்தின் வாழ்க்கையில் சதுரங்கம் பல அதிசயங்களை நிகழ்த்தின.சுஷாந்த் தன் பள்ளியில் நடக்கும் சதுரங்க போட்டியில் ஒரு போதும் பங்கேற்க தவறியதில்லை. அப்படி பள்ளி அளவில் நடந்த போட்டிகளை தன்னை விட வயதில் பெரிய மாணவர்களை 'அசால்ட்டாக' தோற்கடித்தான். இது, அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாநில அளவிலான பதக்கங்களை தன,் 13 வயதிலே பெற்றான்.

அட்டகாசம் இதன் மூலம், ஆசிய அளவில் சிறுவர்களுக்காக, 2021ல் நடந்த 'ஆன்லைன்' சதுரங்க போட்டியில் நம் நாட்டின் சார்பாக சுஷாந்த் பங்கேற்றான். அப்போட்டியில், தோல்வியை தழுவினாலும், இவ்வளவு பெரிய போட்டியில் பங்கேற்றது அவனுக்கு பெருமையை தேடி தந்தது. அடுத்ததாக, 2022ல் நடந்த பிரில்லியன்ட் கோப்பை 'ஆன்லைன்' போட்டியில் அட்டகாசமாக விளையாடி முதல் இடத்தை பிடித்தான்.

இதையடுத்து, 2024ல் பெங்களூரில் நடந்த இன்டர்நேஷனல் கிராண்ட்மாஸ்டர்ஸ் ஓபன் சதுரங்க போட்டியில் சுஷாந்த் பங்கேற்றான். இதில், பல போட்டிகளில் தன் திறமையை வெளிப்படுத்தினான். நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற போட்டியில், 7வது இடத்தை பிடித்து அசத்தினான். பயிற்சியாளர் இல்லாமல் முறையாக பயிற்சிகளை எடுக்காமல், 7வது இடத்தை பிடித்த அவனிடம் பலரும் பல கேள்விகளை கேட்டு தொலைத்து எடுத்தனர்.

இதையடுத்து, இவர் சர்வதேச அளவிலான பயிற்சிகளில் பங்கேற்பதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறான். சதுரங்கத்தை தவிர சுஷாந்த் இசைக்கருவிகளை உபயோகிப்பதிலும் கைதேர்ந்தவராக இருக்கிறான். வீட்டில் தன் ஓய்வு நேரங்களில் பியானோ வாசித்து மகிழ்கிறான்.






      Dinamalar
      Follow us