sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/ஆடுகளம்/ தாலுகா அளவிலான தசரா போட்டி: மைசூரில் இன்று முதல் துவக்கம்

தாலுகா அளவிலான தசரா போட்டி: மைசூரில் இன்று முதல் துவக்கம்

தாலுகா அளவிலான தசரா போட்டி: மைசூரில் இன்று முதல் துவக்கம்


ADDED : செப் 04, 2025 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2025 11:22 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மைசூரு: மாவட்ட பஞ்சாயத்து மற்றும் இளைஞர் மேம்பாட்டு விளையாட்டுத் துறை சார்பில், தாலுகா அளவிலான தசரா விளையாட்டுப் போட்டிகள் நேற்று துவங்கின.

மைசூரு தசரா ஆண்டுதோறும் மைசூரு மாவட்டத்திற்கு உட்பட்ட தாலுகாக்களில் தசரா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுவோர் தசராவின்போது பரிசு வழங்கி கவுரவிக்கப்படுவர்.

அதுபோன்று இந்தாண்டும் தாலுகா அளவிலான தசரா விளையாட்டுப் போட்டிகள் நேற்று துவங்கின. இந்த போட்டிகள், வரும் 7ம் தேதி வரை நடத்தப்படுகின்றன.

ஆண்களுக்கு, 100, 200, 400, 800, 1,500, 5,000, 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், டிரிபிள் ஜம்ப், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், 110 மீ., தடை ஓட்டப்பந்தயம், 400 மீட்டர், 1,600 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயங்கள் நடக்கின்றன.

பெண்களுக்கு 100, 200, 400, 800, 1,500, 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், டிரிபிள் ஜம்ப், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், 100 மீட்டர் தடை ஓட்டப்பந்தயம், 400, 1,600 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயங்கள் நடக்கின்றன.

இவை தவிர, வாலிபால், கால்பந்து, கோ கோ, கபடி, த்ரோபால் போட்டிகளுடன், யோகாசன போட்டிகளும் நடக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us