விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டி கர்நாடகா அணியில் ராகுல், பிரசித்
விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டி கர்நாடகா அணியில் ராகுல், பிரசித்
ADDED : டிச 19, 2025 05:06 AM

: விஜய் ஹசாரே ஒரு நாள் கோப்பை கிரிக்கெட் போட்டியில்:
இந்திய கிரிக்கெட்டின் மதிப்புமிக்க உள்நாட்டு போட்டியான, விஜய் ஹசாரே ஒரு நாள் கோப்பை கிரிக்கெட் வரும், 24ம் தேதி துவங்கி அடுத்த மாதம், 18ம் தேதி வரை நாட்டின் பல நகரங்களில் நடக்கிறது.
இறுதிப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது.
மத்திய பிரதேசம், டில்லி, மும்பை, கொல்கட்டா, கேரளா உட்பட 32 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. கர்நாடகா ஏ குழுவில் இடம் பிடித்துள்ளது.
இந்த போட்டிக்கான கர்நாடகா அணியை, கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் வெளியிட்டு உள்ளது. மயங்க் அகர்வால் கேப்டனாக உள்ள கர்நாடக அணிக்கு, கருண் நாயர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்திய அணியில் தற்போது விளையாடி வரும் பேட்ஸ்மேன் ராகுல், பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவும் அணியில் இடம் பிடித்து உள்ளனர்.
இவர்களை தவிர தேவ்தத் படிக்கல், சம்ரன், ஸ்ரீஜித், அபினவ் மனோகர், ஸ்ரேயாஸ் கோபால், விஜயகுமார் வைஷாக், மன்வந்த் குமார், ஸ்ரீஷா ஆச்சார், அபிலாஷ் ஷெட்டி, சரத், ஹர்ஷில் தரமணி, துருவ் பிரபாகர் ஆகியோர் அணியில் உள்ளனர
- நமது நிருபர் -

