sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

பானுவாசர ஸ்பெஷல்

/

 ஐந்தாவது தலைமுறையாக வீணை தயாரிக்கும் குடும்பம்

/

 ஐந்தாவது தலைமுறையாக வீணை தயாரிக்கும் குடும்பம்

 ஐந்தாவது தலைமுறையாக வீணை தயாரிக்கும் குடும்பம்

 ஐந்தாவது தலைமுறையாக வீணை தயாரிக்கும் குடும்பம்


ADDED : நவ 23, 2025 04:15 AM

Google News

ADDED : நவ 23, 2025 04:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

: மைசூரில் வீணை, இசை கருவிகளைதயாரித்து மற்றும் பழுது பார்க்கும் குடும்பத்தில், ஐந்தாவது தலைமுறையை சேர்ந்த ராஜேஷ் உருவெடுத்து

உள்ளார்.

வீணை இசைக்கு மயங்காதவர் யாருமில்லை. வீணையை, ஐந்து தலைமுறைகளாக பழுது பார்த்து வருபவரே, இக்கட்டுரையின் நாயகன். மைசூரு நகரின் ராமானுஜர் சாலையில் உள்ள 'ஸ்ரீசரஸ்வதி மியூசிகல் ஒர்க்ஸ்' உரிமையாளர். வீணை பழுது பார்க்க, மைசூரில் இந்த ஒரு கடை மட்டுமே உள்ளது.

பட்டங்கள் மறைந்த வீணை கலைஞர் என்.கங்காதர், சாந்தா தம்பதி மகன் ராஜேஷ், மைசூரு குண்டுராவ் நகரில் வசித்து வருகிறார். கங்காதர், தனது தாய்வழி தாத்தா 'வீணை' புட்டாச்சாரிடம் வீணை செய்யும் கலையை கற்றுக் கொண்டார். இவர், மைசூரு அரண்மனையில் வீணை பழுது பார்ப்பவராக பணியாற்றினார். மேலும் துரைசாமி அய்யங்கார், சீனிவாச அய்யங்கார், சித்ரா வீணா ரவிகிரண், சரஸ்வதி போன்ற பிரபல இசை கலைஞர்களின் வீணைகளை வடிவமைத்தவர். 'வீணை ஷில்ப சதுர்', 'கலாதீப்தி' போன்ற பட்டங்களை பெற்று கங்காதர் புகழ் பெற்று விளங்கினார்.

தனது தந்தை கங்காதர் மறைந்த போது, கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியில் இருந்த அவரது மகன் ராஜேஷ், 56 வது வயதில், கடையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

தன் அனுபவம் குறித்து ராஜேஷ் கூறியதாவது:

என் பள்ளி விடுமுறை நாட்களில், எனது தந்தையுடன் கடையில் அமர்ந்து, அவர் செய்வதை கவனித்து வந்தேன். முக்கிய தொழில் நுட்பங்களை எனக்கு கற்றுத்தருவார்.

வழிகாட்டி நான் 4ம் வகுப்பு படிக்கும் போது, மிருதங்கம் வாசிக்க கற்றுக்கொண்டேன். என் திறமையை மேம்படுத்த வித்யா ஆர்.கே.பத்மநாபனிடம் வீணை வகுப்பில் சேர்ந்தேன். பட்டப்படிப்புக்கு பின், தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். தந்தை மறைவுக்கு பின், வேலையை உதறி விட்டு, கடையை நிர்வகித்து வருகிறேன். வீணைகளை தயாரிக்க பலா மரம் அல்லது ரோஸ்வுட் பயன்படுத்துகிறோம். இத்தொழிலில், என் தந்தை தான், எனக்கு வழிகாட்டி. அவர் போன்று புகழ் பெற விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வீணையை உருவாக்குவது மட்டுமின்றி, 'தந்திவாத்ய நாதஸ்ரீ' என்ற பட்டத்தை பெற்றுள்ள ராஜேஷ், வயலின், கிதார், மாண்டலின், சிதார் உள்ளிட்ட அனைத்து கம்பி வாத்தியங்களையும் பழுது சரி செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்.

மேலும் விபரங்களுக்கு 94497 04230 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்

- நமது நிருபர் -.






      Dinamalar
      Follow us