தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ வீட்டை செடி கொடிகளால் அலங்கரித்துள்ள பசுமை விரும்பி

 வீட்டை செடி கொடிகளால் அலங்கரித்துள்ள பசுமை விரும்பி

 வீட்டை செடி கொடிகளால் அலங்கரித்துள்ள பசுமை விரும்பி


ADDED : நவ 30, 2025 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 04:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு மாவட்டம், கோகுலம் 3வது ஸ்டேஜில் உள்ள 11வது கிராசில் செல்லும்போது, நம் கவனத்தை நமக்கே தெரியாமல் திருடும் வகையில் ஒரு வீடு அமைந்திருக்கும். அதாவது, வீட்டின் முன் பகுதியில் வளர்ந்து தொங்கும் செடி, கொடிகள் ஒரு வனப்பகுதியை போல தோன்றுகிறது. இந்த பசுமையான செடி, கொடிகள் வீட்டை அரண் போல பாதுகாக்கின்றன.

இந்த வீட்டின் உரிமையாளர் பெஞ்சமின் வாஸ், 67. இவர், ஒரு பசுமை விரும்பி. 'இயற்கை காதலர்' என சொல்லலாம். தன் வீட்டை பச்சை நிறத்தால் செடிகளால் பாதுகாத்துள்ளார்.

இவர், தன் வீட்டிற்குள்ளும், அலங்கரிக்க தவறவில்லை. வீட்டின் அறைகளில் அலங்கார பொம்மைகள், சிற்பங்கள் உள்ளிட்டவற்றால் அலங்கரித்துள்ளார். வீட்டின் உள்ளே கூட கொடிகளை வைத்து இயற்கையின் மீதான தன் காதலை வெளிச்சமிட்டு காட்டுகிறார்.

கடலில் கிடைக்கும் சிற்பிகள், மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகள் ஆகியவற்றையும் சேகரித்து வருகிறார். அலங்காரம் செய்வதிலும், பண்டைகால பொருட்களை சேகரிப்பதிலும் ஆர்வம் அதிகம். இதனால், தன் வீடு முழுக்க பொருட்களாக காட்சி அளிக்கின்றன.

இந்த வீடு வெறும் வசிப்பிடமாக மட்டுமின்றி, இயற்கையின் அழகு தேசமாக உள்ளது. இங்கு அவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இதற்கு, அவரது குடும்பத்தினர் முழு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னொரு காலத்தில் தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தார். வீட்டின் முன்பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட செடி, கொடிகள் உள்ளன.

மொட்டை மாடியிலும் பல வகையான தாவரங்கள் வைக்கும் பெரிய தொட்டிகளின் வரிசை உள்ளது. இது பசுமையான உணர்வையும், மருத்துவ குணம் தரும் காற்றையும் உருவாக்குகிறது

- நமது நிருபர் -:.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us