sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

பானுவாசர ஸ்பெஷல்

/

மாணவர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கும் உணவகம்

/

மாணவர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கும் உணவகம்

மாணவர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கும் உணவகம்

மாணவர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கும் உணவகம்


ADDED : ஆக 30, 2025 11:11 PM

Google News

ADDED : ஆக 30, 2025 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எந்த தொழில் என்றாலும், அதில் லாப நோக்கம் இருக்கும். லாபம் கிடைக்காவிட்டால், தொழிலே வேண்டாம் என, நினைப்போரே அதிகம். இச்சூழ்நிலையில், லாபத்தை பார்க்காமல், மாணவர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கும், ஹோட்டல் உரிமையாளர் மற்றவருக்கு முன் மாதிரியாக திகழ்கிறார்.

சிக்கமகளூரு நகரின் மாவட்ட கலெக்டர் வளாகத்தின் பின் பகுதியில் 'ஜீவிதா' என்ற பெயரில், பசண்ணா என்பவர் சிறிய உணவகம் நடத்துகிறார். இவர், மாணவர்களுக்கு அன்னபூரணியாக விளங்குகிறார். இவர்களுக்கு 20 ரூபாய்க்கு வயிறு நிரம்ப உணவளிக்கிறார். தொலைவில் உள்ள ஊர்களில் இருந்து, சிக்கமகளூரில் உள்ள அரசு கல்லுாரிக்கு கல்வி கற்க வரும் மாணவர்கள், இந்த உணவகத்தை நம்பியுள்ளனர். தங்களுக்கு குறைந்த விலைக்கு உணவளிக்கும் பசண்ணா மீது, அதிக அன்பு வைத்துள்ளனர்.

பல்வேறு காரணங்களுக்காக, மாவட்ட அலுவலகத்துக்கு, வரும் பொது மக்கள், விவசாயிகளும் இதே உணவகத்தில் சாப்பிடுகின்றனர். 20 ரூபாய்க்கு தரமான, சுவையான உணவு கிடைப்பதால் நிம்மதியாக சாப்பிட்டு செல்கின்றனர். சாதம், சாம்பார், மோர், அப்பளம், ஊறுகாய் வழங்கப்படுகிறது.

காய்கறி, சமையல் எண்ணெய், காஸ், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை காரணம் காட்டி, உணவு, சிற்றுண்டி விலையை இஷ்டப்படி அதிகரிப்போர் மத்தியில் பலருக்கும் ஆபத்பாந்தவனாக திகழ்கிறார்.

உணவக உரிமையாளர் பசண்ணா கூறியதாவது:

இந்த உணவகத்தை மாணவர்களுக்காகவே நடத்தி வருகிறோம். அவர்களின் கஷ்டம் எனக்கு தெரியும். தினமும் அதிகாலையில் வீட்டில் இருந்து புறப்படுகின்றனர். பஸ்சை பிடிக்கும் அவசரத்தில் உணவு சாப்பிடாமல் கிளம்புவோர் நிறைய உள்ளனர். இவர்களுக்காகவே, எங்கள் உணவகத்தில், 20 ரூபாய்க்கு உணவு வழங்குகிறோம். விலை குறைவு என்பதால், சுவையிலும், தரத்திலும் குறைவிருக்காது. வீட்டு உணவை போன்றிருக்கும். மாணவர்கள் தினமும் உணவகத்துக்கு வந்து வயிறு நிரம்ப உணவு சாப்பிட்டு செல்கின்றனர். இது எனக்கு திருப்தி அளிக்கிறது. எனக்கு லாபம் இல்லையென்றாலும், உணவகத்தை தொடர்ந்து நடத்துகிறேன். மாணவர்கள் மட்டுமின்றி, மாவட்ட கலெக்டர் அலுவலத்துக்கு வரும் பொது மக்களும் விரும்பி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்

- நமது நிருபர் - .






      Dinamalar
      Follow us