sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ மைசூரு சாலையில் 'சிறிய இலவச நுாலகம்'

 மைசூரு சாலையில் 'சிறிய இலவச நுாலகம்'

 மைசூரு சாலையில் 'சிறிய இலவச நுாலகம்'


ADDED : நவ 30, 2025 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 04:48 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மொபைல் போன்கள், டிஜிட்டல் கேஜெட்களால், நுாலகங்கள் இருப்பதை மறந்து வரும் இன்றைய தலைமுறையினர், மீண்டும் புத்தகம் வாசிப்பதை பழக்கப்படுத்த, மைசூரை சேர்ந்த இளைஞர், புதிய யுக்தியை கையாண்டுள்ளார்.

மைசூரு குவெம்பு நகரை சேர்ந்தவர் முகமது ஓமர் உல் ஹக். லண்டன் பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளி பட்டதாரியாவார். இவரின் தந்தை பேராசிரியர் ஹக், சாரதா விலாஸ் கல்லுாரி முன்னாள் முதல்வராவார். 'டாஸ்க்' கல்வி நல அறக்கட்டளை நிறுவி, சேவை செய்து வருகிறார்.

லண்டன் பாணி லண்டனில் படிப்பை முடித்த பின், மைசூரு திரும்பிய முகமது ஓமர் உல் ஹக், லண்டனில் பார்த்த 'தெரு நுாலகம்' என்ற யோசனையை, நகரில் செயல்படுத்த முடிவு செய்தார். இதற்கு அவரின் தந்தையும் உதவினார்.

அக்டோபரில் துவங்கிய 'மினி பிரீ லைப்ரரி' எனும் சிறிய இலவச நுாலகம், நகரின் மூன்று இடங்களில் திறக்கப்பட்டன. இத்திட்டம் இரண்டு மாதங்களில் மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.

இதுகுறித்து முகமது ஓமர் உல் ஹக் கூறியது:

இத்திட்டம், அமெரிக்காவை சேர்ந்த டாட் ஹெர்பெர்ட் போல் என்பவர், 2009ல் துவக்கினார். தனது வீட்டின் முன், மரப் பலகைகளால் ஆன பறவைகள் கூண்டில் புத்தகங்களை வைத்திருந்தார். இந்த யோசனை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது.

இதுவரை 2 லட்சம் 'மினி பிரீ லைப்ரரி' அமைக்கப்பட்டுள்ளன. படிப்புக்காக லண்டன் சென்றிருந்தபோது, அங்கு இதுபோன்று குடியிருப்பு பகுதிகளில் மினி நுாலகத்தை பார்த்தேன்.

விடுமுறையில் மைசூரு வந்தபோது, மக்கள் புத்தகம் வாசிப்பதை பார்த்தேன். அவர்களிடம் பேசும்போது, புத்தகம் படிக்கும் ஆர்வத்தில் இருப்பதை உணர்ந்தேன். உடனடியாக உலகம் முழுதும் இருக்கும் இலவச நுாலகம் குறித்து அவர்களுக்கு விளக்கினேன்.

அவர்களும் ஆச்சரியப்பட்டு, இங்கும் இதுபோன்று துவங்க ஆலோசனை வழங்கினர். உடனடியாக களத்தில் இறங்கினேன். என் நண்பர் விஷால், புத்தகம் வைக்க, மரப் பலகை வடிவமைத்து கொடுத்தார். இந்த பெட்டிகள் மீது வண்ணம் பூசப்பட்டன.

இந்த பெட்டிகள், நகரின் வாணி விலாஸ் மொஹல்லாவில் உள்ள டீனாஸ் கபே; கோகுலத்தில் புக்ஸ் அண்ட் பிரியூ; குவெம்பு நகரில் உள்ள எங்கள் வீட்டின் முன்; குமெ ஈ அண்ட் எப் பிளாக் ஆகிய இடங்களில் வைத்துள்ளோம்.

500 புத்தகங்கள் சாலையில் நடந்து செல்வோருக்கு தெரியும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. பலர் தாமாக முன் வந்து, 500க்கும் மேற்பட்ட புத்தகங்களை, நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

வாசகர்கள் விரும்பும் புத்தகம் இருந்தால், தாங்கள் ஏற்கனவே படித்த அல்லது அவர்களிடம் உள்ள புத்தகங்களை இங்கே வைத்துவிட்டு, வேண்டிய புத்தகத்தை எடுத்துச் செல்லலாம்.

இதை பார்த்த பலரும், அவரவர் குடியிருப்பு பகுதிகளிலும் நுாலகம் திறக்க முன்வந்து உள்ளனர். இன்னும் இரண்டு மாதங்கள் ஆய்வு செய்த பின், மேலும் பல பகுதிகளில் இதை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம்.

ஒவ்வொரு 'மினி பிரீ லைப்ரரி'யிலும், 'கியூஆர்' குறியீடு உள்ளது. இதை ஸ்கேன் செய்தால், இத்திட்டம் உலகளவில் எங்கெங்கு உள்ளது; மைசூரில் எங்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் விபரங்களுக்கு, 94491 18357 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.

30_Article_0001, 30_Article_0002

தந்தை ஹக்குடன் முகமது ஓமர் உல் ஹக். (அடுத்த படம்) 'சிறிய இலவச நுாலகம்' பெட்டியில் தங்களுக்கு வேண்டிய புத்தகத்தை தேர்வு செய்யும் சிறுமியர்

- நமது நிருபர் -:.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us