தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ பெங்களூரில் ஆசியாவின் முதல் தெரு விளக்கு

பெங்களூரில் ஆசியாவின் முதல் தெரு விளக்கு

பெங்களூரில் ஆசியாவின் முதல் தெரு விளக்கு


ADDED : மே 03, 2025 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2025 11:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆசியாவின் முதல் மின்சார தெரு விளக்கு, பெங்களூரில் அமைக்கப்பட்டது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? 1905 ஆகஸ்ட் 5ம் தேதி பெங்களூரு கே.ஆர்., மார்க்கெட்டில் ஆசியாவின் முதல் தெரு விளக்கு அமைக்கப்பட்டது.

மண்ணெண்ணெய்


மின்சார இணைப்பு வருவதற்கு முன்பு, பெங்களூரில் உள்ள தெரு விளக்குகள், மண்ணெண்ணெயால் வெளிச்சம் தந்தன. இதை பராமரிக்க குறிப்பிட்ட பகுதிகளுக்கு மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஒருவர், முந்தைய நாள் எரிந்த நெருப்பால் கருப்பு நிறத்துக்கு மாறிய கண்ணாடியை துடைப்பார்.

அதன் பின், மற்றொருவர், அதில் மண்ணெண்ணெய் ஊற்றுவார். மூன்றாவது நபர், திரியில் நெருப்பு ஏற்றுவார். இந்த சிஸ்டம், பல நுாறு ஆண்டுகளாக தொடர்ந்தது.

சிவனசமுத்திராவில் காவிரி நீர்வீழ்ச்சிக்கு அருகில் முதன் முதலில் நீர் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த மின்சாரம், கோலார் மாவட்டம் தங்கவயலில் தங்க சுரங்க நிறுவனத்துக்கு அனுப்ப்பட்டது. பெங்களூரு வழியாக மின்சாரம் சென்றது.

பின், நீர்மின் நிலையம் அதிகப்படியான மின்சாரத்தை உற்பத்தி செய்தபோது, நகரின் தெரு விளக்குகளை ஒளிரச்செய்ய, மைசூரு திவான் சேஷாத்திரி அய்யர், மேஜர் ஏ.சி.ஜே., டி லாட்பினியேருக்கு முன்மொழிந்தார்.

மைசூரு முதன்மை மின்சார பொறியாளர் ஹாரி பார்க்கர் கிப்ஸ் தலைமையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதற்கு, தங்கச்சுரங்கத்தை நிர்வகித்த ஆங்கிலேயர் கம்பெனியின் ஜான் டெய்லர் அண்டு சன்ஸ் முக்கிய பங்கு வகித்தனர்.

மன்னர் ஒப்புதல்


இதை அறிந்த அப்போதைய மைசூரு மன்னர் நால்வடி கிருஷ்ணராஜ உடையார், உபரி மின்சாரத்தை, பொது மக்கள் நலனுக்கு பயன்படுத்த உத்தரவிட்டார்.

பெங்களூரில் பழைய நகரம், ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் கன்டோன்மென்ட் பகுதிகள் என தனித்தனியாக நிர்வகிக்கப்பட்டு வந்தன.

இந்திய மின்சார சட்டத்தின்படி, கன்டோன்மென்ட் பகுதியில் மின்மயமாக்கல் செயல்படுத்த வேண்டும். முதல் மின் துணை நிலையம், கே.ஆர்., மார்க்கெட் அருகில் 'ஸ்டேஷன் ஏ' பெயரில் அமைக்கப்பட்டது.

திவான் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், வைஸ்ராய் கவுன்சில் உறுப்பினரான சர் ஜான் ஹெவெட், 1905 ஆகஸ்ட் 5ம் தேதி மின்சார சேவையை துவக்கி வைத்தார்.

இதற்காக நகரின் கே.ஆர்.,மார்க்கெட், சிவாஜி நகர் உட்பட முக்கிய இடங்களில், தலா நான்கு விளக்குகள் கொண்ட 800 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டன.

பின், 1920ல் கே.ஆர்., மார்க்கெட் மின் நிலையம், ஆனந்தராவ் சதுக்கத்துக்கு மாற்றப்பட்டது.

அதன்பின், எம்.ஜி., சாலையிலும், கன்டோன்மென்டிலும் தலா ஒரு மின் துணை நிலையங்கள் அமைக்கப்பட்டன.

ரூ.1 லட்சம் வருவாய்


ஈஸ்ட் பரேடு தேவாலயத்துக்கான மின்சாரம், எம்.ஜி. சாலை துணை மின் நிலையத்தில் இருந்து கொடுக்கப்பட்டது.

இந்த முழு மின்சார திட்டத்துக்கு ஆறு லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டது. இதில் பராமரிப்புக்காக, ஆண்டுதோறும் 50,000 ரூபாய் செலவானது. ஓராண்டுக்குள், 1,630 வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.

ஒரு மின்சார பல்ப்க்கு மாதம் ஒரு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆண்டுதோறும் அப்போதைய ஆங்கிலேய அரசுக்கு ஒரு லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.

வரலாற்று சிறப்புமிக்க இரும்பு மின்கம்பங்கள், நாளடைவில் அகற்றப்பட்டன. வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் பலரும் பார்க்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.

 ஆசியாவில் முதன் முறையாக கே.ஆர்., மார்க்கெட்டில் அமைக்கப்பட்டிருந்த மின்சார விளக்கு கம்பம், பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ளது.

 சிவாஜி நகர் ரஸ்ஸல் மார்க்கெட் அருகில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்கு கம்பம் - கோப்பு படம்

- நமது நிருபர் -.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us