தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ குங்குமப்பூ பயிரிடுவதில் ஆர்வம் காட்டும் பெங்களூரு மக்கள்

 குங்குமப்பூ பயிரிடுவதில் ஆர்வம் காட்டும் பெங்களூரு மக்கள்

 குங்குமப்பூ பயிரிடுவதில் ஆர்வம் காட்டும் பெங்களூரு மக்கள்


ADDED : நவ 30, 2025 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 04:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுவாக மலைப்பாங்கான குளிர்பிரதேசங்களில், குங்குமப்பூ அதிகமாக விளைவிப்பது வழக்கம். ஆனால் மலைக்குன்றுகள் இல்லாத பெங்களூரு நகரில் குங்குமப்பூ விளைவிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

குங்குமப்பூ, மருத்துவ குணங்கள் நிறைந்தது; அதிக விலை உடையது. மலைப்பகுதிகள், வனப்பகுதிகளில் குங்குமப்பூ விளைவிப்பது சகஜம். இப்போது நகர்ப்புறங்களில் வீடுகளிலேயே பயிரிடுகின்றனர். பெங்களூரு, சிருங்கேரி, குனிகல் மற்றும் துமகூரில் குங்குமப்பூ விளைவிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில், இது 'டிரென்ட்'டாகி வருகிறது.

இதுகுறித்து, கர்நாடக குங்குமப்பூ விவசாயிகள் சங்க செயலர் லோகேஷ் வொலிவின் - 94819 16726, கூறியதாவது:

எங்கள் சங்கத்தை சேர்ந்த பலர் விவசாய பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும் பலரும் தற்போது ஐ.டி., - பி.டி., உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரத்துறை உட்பட பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர்.

சிலர் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறையில் அதிகாரியாகவோ, டாக்டராகவோ பணியாற்றுகின்றனர்.

பெங்களூரில் அபார்ட்மென்ட்களில் வசிக்கும் பலர், தங்களின் வீட்டுக்குள்ளேயே குங்குமப்பூ விளைவிக்கின்றனர்.

பெங்களூரில் மலைப்பகுதி இல்லையென்றாலும், இந்த பகுதி உயரமான பகுதியில் அமைந்திருப்பது, தட்பவெட்ப நிலை குங்குமப்பூ விளைச்சலுக்கு அனுகூலமாக உள்ளது. எனவே பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

காஷ்மீரில் இருந்து விதைகள் வாங்கி வந்து பயிரிடுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில், விதைகளின் விலை 250 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

குங்குமப்பூ பயிரிட்டால் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். அரசு மானியம் வழங்கி ஒத்துழைப்பு அளித்தால், பலரும் குங்குமப்பூ பயிரிட முன் வருவர்.

மார்க்கெட்டில் குங்குமப்பூவுக்கு அதிகமான டிமாண்ட் உள்ளது. இதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அழகு பொருட்கள் தயாரிக்க, மருந்துகள் தயாரிக்க என, பல நோக்கங்களுக்கு பயன்படுகிறது. தற்போது சுத்தமான குங்குமப்பூவின் விலை கிராமுக்கு 2,000 ரூபாயாகும். இதன் மகத்துவத்தை உணர்ந்துள்ள மக்கள், விலையை பொருட்படுத்தாமல் வாங்குகின்றனர்.

இது லாபம் தருகிறது என்பதால், பெங்களூரில் 30க்கும் மேற்பட்ட வீடுகளில், குங்குமப்பூ பயிரிடுகின்றனர். சமீப ஆண்டுகளாக இந்த டிரென்ட் ஆரம்பமாகியுள்ளது. வரும் நாட்களில் இவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us