sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

பானுவாசர ஸ்பெஷல்

/

பகவத் கீதை வசனம் 13 வயது சிறுவன் சாதனை

/

பகவத் கீதை வசனம் 13 வயது சிறுவன் சாதனை

பகவத் கீதை வசனம் 13 வயது சிறுவன் சாதனை

பகவத் கீதை வசனம் 13 வயது சிறுவன் சாதனை

1


ADDED : ஏப் 06, 2025 05:33 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 05:33 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனிதர்கள், பகவத் கீதை வசனம் படிப்பதன் மூலம், ஆன்மிக தெளிவு, மன அமைதி, தர்மம், கடமை, செயல், ஆன்மிக பயணத்தில் வழிகாட்டுதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றன.

கர்நாடகாவின் 13 வயது சிறுவன் ஒருவர், பகவத் கீதை மூலம், 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.

தட்சிண கன்னடாவின் சுள்ளியா டவுனை சேர்ந்தவர் மத்தடுக்கா. இவரது மனைவி பவானி. இந்த தம்பதியின் மகன் ஜனன், 13. மங்களூரில் உள்ள ஸ்வரூப அத்யாய கேந்திரா 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர், சுதர்சன சக்கரத்தில் பகவத் கீதை வசனங்களை எழுதி சாதனை படைத்துள்ளார். இதற்காக இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து ஜனனின் தாய் பவானி கூறியதாவது:

என் மகன் ஜனன் 7ம் வகுப்பு வரை, பெங்களூரில் தனியார் பள்ளியில் படித்தார். பின், எட்டாம் வகுப்புக்கு மங்களூரு ஸ்வரூப அத்யாய கேந்திராவில் சேர்த்தோம். இது ஒரு வழக்கமான பள்ளி இல்லை.

குழந்தைகளுக்கு வித்தியாச முறையில் கல்வி கற்பிக்கும் நிறுவனம். இங்கு படிக்கும் மாணவர்கள் குறைந்தது 10 உலக சாதனைகளை படைக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

ஜனனுக்கு 25 சாதனைகள் படைக்க வேண்டும் என்று இலக்கு உள்ளது. எண்களை பயன்படுத்தி பகவத் கீதையை தனித்துவ முறையில் எழுதினார். தடினமான வெள்ளை தாளில் பகவத் கீதையின் 700 சுலோகம் கொண்ட 1,400 வரிகள் சுதர்சன சக்கர வடிவில் எழுதப்பட்டன. இதில் 84,426 எண்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

சுதர்சன சக்கரத்தில் பகவத் கீதை வசனம் எழுத இரண்டு மாதங்கள் ஆனது. ஒரு நாளுக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் எடுத்துக் கொண்டார். பகவத் கீதை வசனம் எழுதியற்காக, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

நாட்டில் உள்ள 784 மாவட்டங்களின் பெயர்களையும் சொல்லும் திறன் அவருக்கு உள்ளது. இசை, ஓவியம் மீது அவருக்கு ஆர்வம் உள்ளது. மிமிக்ரியும் செய்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us