sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ புதுமையான செயலால் தீய பழக்கத்தை விரட்டிய மருத்துவமனை காவலாளி

 புதுமையான செயலால் தீய பழக்கத்தை விரட்டிய மருத்துவமனை காவலாளி

 புதுமையான செயலால் தீய பழக்கத்தை விரட்டிய மருத்துவமனை காவலாளி


ADDED : பிப் 15, 2026 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 06:26 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா பெலகோலா கிராமத்தை சேர்ந்தவர் சிவண்ணா, 40. மருத்துவமனை காவலாளியான இவர், சில சில்லரை வேலைகளையும் செய்து வருகிறார். இவருக்கு சிகரெட் மற்றும் மது அருந்தும் பழக்கம் இருந்தது. இந்த தீய பழக்கங்களால், இவரை பலர் மதிப்பதில்லை.

அதனால், தீய பழக்கங்களில் இருந்து வெளிவர பல முயற்சிகள் செய்தார். கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன், வித்தியாசமான முறையில் தன் நேரத்தை செலவிட நினைத்தார். இதன் மூலம் தீய பழக்கங்களில் இருந்து விடுதலை பெற முடியும் என்றும் நம்பினார்.

திட்டம்

இதற்காக, அவர் தேர்ந்தெடுத்த விஷயம் தான் வித்தியாசமானது. பலரும் செல்வதற்கு பயம் கொள்ளும் இடத்தில், பயமில்லாமல் ஒரு விஷயத்தை செய்ய முயன்றார்.

அது என்னவென்றால், தனது கிராமத்தில் உள்ள பட்டியல் ஜாதியினர் கல்லறை பாழடைந்து கிடப்பதை பார்த்து மன விரக்தி அடைந்தார். இந்த மயான பூமியை பசுமையான பூமியாக மாற்ற திட்டமிட்டார்.

கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் அளவுடைய மயான பூமியை சுத்தப்படுத்தும் வேலைகளை செய்ய துவங்கினார். அதிகாலையில் வேலைக்கு சென்று, மதியம் வீட்டுக்கு வந்தவுடன் மயானத்துக்கு செல்வார். முதலில், மயானத்தை சுத்தம் செய்யும் வேலைகளை செய்தார். பின், மரம், செடிகளை நட்டார். இந்த மரங்களை பராமரிக்கும் பணியையும் செய்து வந்தார். அப்போது, ஒரு நாள் இவர் நட்ட செடியில் இருந்து ஒரு பூ பூத்தது.

மன மாற்றம்

இந்த பூவை பார்த்த சிவண்ணாவுக்கு அளப்பரிய சந்தோஷம் ஏற்பட்டது. இது, அவரை தீய பழக்கங்களில் இருந்து வெளியே கொண்டு வந்தது. இருப்பினும், நாலு விதமாக பேசும் சிலர், சிவண்ணாவை திட்டி தீர்த்து உள்ளனர். 'மயானத்தில் என்ன வேலை செய்கிறாய். உனக்கு என்ன பைத்தியமா. உனக்கு பேய் பிடித்து விடும்' என்றெல்லாம் விமர்சித்துள்ளனர்.

அதையெல்லாம் சிவண்ணா கண்டு கொள்ளவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக மதிய நேரத்தில், மயானத்தில் வேலை பார்த்து வருகிறார்.

தற்போது, மயானமே பசுமையாக காட்சி அளிக்கிறது. அங்கு, கொய்யா, மா, வாழை போன்ற மரங்கள் உள்ளன. ஒரு தனியார் எஸ்டேட் போல காட்சி அளிக்கிறது.

இதுகுறித்து, சிவண்ணா கூறுகையில், ''இது வித்தியாசமாக இருக்கலாம். ஆனால், எனக்கு இது பிடித்து உள்ளது. நான் தீய பழக்கங்களில் இருந்து வெளிவருவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. எனவே, யார் என்ன சொன்னாலும், எனக்கு கவலையில்லை,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us