sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 21, 2026 ,தை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஸ்பெஷல்

/

பானுவாசர ஸ்பெஷல்

/

 பழைய கடவுள் படங்களை சேகரிக்கும் 'மெஷ் பாக்ஸ்'

/

 பழைய கடவுள் படங்களை சேகரிக்கும் 'மெஷ் பாக்ஸ்'

 பழைய கடவுள் படங்களை சேகரிக்கும் 'மெஷ் பாக்ஸ்'

 பழைய கடவுள் படங்களை சேகரிக்கும் 'மெஷ் பாக்ஸ்'


ADDED : ஜன 11, 2026 05:40 AM

Google News

ADDED : ஜன 11, 2026 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீடுகளில் வைத்திருந்த கடவுள் படங்கள் பழசானால், கண்ணாடி உடைந்து விட்டால், அந்த கடவுள் படங்களை கோவில் அருகேயுள்ள அரச மரத்தடி, சாலை ஓரம், சாக்கடை உட்பட கண்ட இடங்களில் வீசுகின்றனர். இதை பார்க்கும் போது, கடவுளுக்கே இந்தக் கதி வந்துள்ளதே என, மனம் வருத்தமடையும். தற்போது இத்தகைய படங்களுக்கு, விடிவு காலம் வந்துள்ளது.

வீடுகளில் பல ஆண்டுகளாக, பக்தியுடன் பூஜிக்கப்பட்ட கடவுள் படங்கள் பழையதானாலோ அல்லது தவறி விழுந்து கண்ணாடி உடைந்தாலோ, வீட்டில் வைக்கக்கூடாது என்பது ஐதீகம். எனவே கோவில் அருகேயுள்ள அரச மரத்தடி, அரளி மரத்தடி மற் றும் ஏரிகளில் வீசுகின்றனர். சில பகுதிகளில் சாக்கடைகளிலும் கடவுள் படங்கள் கிடப்பதை காணலாம். இதற்கு தீர்வு காண, பெங்களூரு நாகரபாவியின், அன்னபூர்ணேஸ்வரி நகரின் ஆரோக்கியா லே - அவுட்டில் உள்ள, விநாயக வெங்கடேஸ்வரா கோவில் நிர்வாகம் முன் வந்துள்ளது.

சிவோஹம் யோகா மையம், உசிரு பவுன்டேஷன் ஒருங்கிணைப்பில், கோவில் நிர்வாகம், 'மெஷ் பாக்ஸ்' அமைத்துள்ளது. இது, அசையாமல் இருக்கும் வகையில், வெல்டிங் செய்யப்பட்டுள்ளது.

வீடுகளில் தேவையற்ற கடவுள் படங்கள் இருந்தால், இந்த மெஷ் பாக்சில் வைத்து விட்டு, கோவில் உண்டியலில் தங்களால் முடிந்த காணிக்கை செலுத்தினால் போதும். கடவுள் படங்களை கவுரவமான முறையில் உசிரு பவுன்டேஷன் அப்புறப்படுத்தும்.

உசிரு பவுன்டேஷன் நிர்வாகி ஷோபா பட் கூறியதாவது:

நமது இயற்கை, கலாசாரம், கோட்பாடுகளை உணர்ந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்தால் சுகம், நிம்மதி கிடைக்கும். நாம் பக்தியுடன் பூஜிக்கும் நோக்கில் விக்ரகம் அல்லது படங்கள் வைத்துக் கொள்கிறோம். பல ஆண்டுகள் பூஜித்த பழைய படங்களை, கோவிலின் சுற்றுப்பகுதிகள், நாகர் சிலை அருகில், மரத்தடி என, பல்வேறு இடங்களில் வீசுகின்றனர். இது நல்லது அல்ல.

இனி இது போன்று, படங்களை வீதியில் வீச வேண்டாம். நாங்கள் ஆரோக்கிய லே - அவுட்டில் உள்ள விநாயக வெங்கடேஸ்வரர் கோவில் வெளியே, நாகர் சிலை அருகே மெஷ் பாக்ஸ் வைத்துள்ளோம். பொதுமக்கள் கடவுள் படங்களை, வீதியில் வீசாமல், மெஷ் பாக்சில் வைக்கலாம்.

மெஷ் பாக்சில் வைக்கப்படும் கடவுள் படங்களை எடுக்கப்பட்டு, அவற்றின் மர பிரேம், கண்ணாடி, அதற்குள் உள்ள கடவுள்களின் காகித படங்கள் என, தனித்தனியாக பிரிக்கப்படும்.

மரக்கட்டை பிரேம் மற்றும் கண்ணாடிகள் மறு சுழற்சி மையங்களுக்கு அனுப்பப்படும். காகிதத்தில் வரையப்பட்ட காகித படங்களை சேகரித்து பக்கெட் அல்லது டிரம் தண்ணீரில் நனைத்து வைக்கப்படும்.

இரண்டு நாட்களுக்கு பின், அவைகள் பெரும்பாலும் நீரில் கரையும். கோவில் நிர்வாகத்தினர் கோவில் வளாகத்தில் அளித்துள்ள தனி இடத்தில், பள்ளம் தோண்டி கரைந்த காகிதங்கள் போடப்படும். இது, நாளடைவில் இயற்கை உரமாகும். இதன் மூலம் கடவுள் படங்கள் அகற்றப்படும்.

அவசியம் இல்லை என்றால், கடவுள் படங்களை வாங்க வேண்டாம். கோவிலுக்கு செல்லும் போது, படங்களை வாங்கி சென்று, வீட்டில் நிரப்ப வேண்டாம். சிலர் கிரக பிரவேசம் உட்பட சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது, கடவுள் படங்களை பரிசளிக்க வேண்டாம். பயனுள்ள பொருட்கள், புத்தகங்களை அளிப்பது நல்லது.

பொதுமக்கள் வீடுகளில் உள்ள பழைய படங்களை தாங்களாகவே பிரித்து, மரத்தினாலான பிரேம், கண்ணாடிகளை மறு சுழற்சி செய்யலாம். கடவுள் உருவம் உள்ள காகிதங்களை, பக்கெட் நீரில் நனைத்து வைக்க வேண்டும். இரண்டொரு நாட்களில், அது கரைந்து விடும். வீட்டு முன்பாக உள்ள மரம், செடிகளில் ஊற்றினால் உரமாகும். இயற்கை மற்றும் கலாசாரத்தை காப்பாற்றுவது நமது கடமை.

பெங்களூரில் உள்ள அனைத்து கோவில்களிலும், ' மெஷ் பாக்ஸ்'வைக்கப்பட்டால், சாலைகள், சாக்கடைகளில் தேவையற்ற கடவுள் படங்கள் வீசப்படுவதை தவிர்க்கலாம்.

தன்னார்வ தொண்டு அமைப்பினர், ஆங்காங்கே வீசப்படும் கடவுள் படங்களை சேகரிக்கின்றனர். அப்போதும் கோவில்களின் அருகில் கடவுள் படங்களை வைப்பது குறையவில்லை. பல ஆண்டுகள் பக்தியுடன் பூஜித்த கடவுள் படங்களை வீசியில் வீசுவது ஏற்புடையது அல்ல. தேவையற்ற படங்களை மெஷ் பாக்சில் போடுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us