இந்திய மன்னர்களை அடிப்படையாக வைத்து புதிய விளையாட்டை கண்டுபிடித்த மாணவி
இந்திய மன்னர்களை அடிப்படையாக வைத்து புதிய விளையாட்டை கண்டுபிடித்த மாணவி
ADDED : ஆக 15, 2026 11:29 PM

- நமது நிருபர் -:
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சின்சனா, 15. இவருக்கு, போகேமான் எனும் கார்ட்டூன் அட்டை விளையாட்டு விளையாடுவது மிகவும் பிடிக்கும். இதே போல, நம் நாட்டு மன்னர்களை வைத்து அட்டை விளையாட்டை உருவாக்க, கடந்த ஆண்டு நவம்பரில் யோசித்தார். இது குறித்து, தனது ஆசிரியர்கள், பெற்றோர், நண்பர்களிடம் தெரிவித்தார். அவர்கள் கூறிய அறிவுரை, கருத்துகளை பெற்று, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அட்டைகளை கடந்த மே மாதம் தயாரித்து முடித்தார். இதை தனது நண்பர்களிடம் கொடுத்து, எப்படி விளையாடுவது என கற்றுக்கொடுத்தார். இந்த விளையாட்டு அனைவருக்கும் பிடித்தது.
50 மன்னர்கள் அட்டைகளில் அசோகர், கிருஷ்ணதேவராயர், சிவாஜி உள்ளிட்ட, 50 இந்திய மன்னர்களின் பெயர்கள், அவர்களுடைய உருவப்படங்களுடன் அச்சிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு அட்டையிலும் மன்னரின் உருவப்படம், மன்னர் பிறந்த ஆண்டு, ஆட்ச்சிகாலம், படை பலம் போன்ற முக்கிய குறிப்பிகள் உள்ளன. இதுவரை, பெங்களூரில் உள்ள 200 அரசு பள்ளிகளுக்கு அட்டை தொகுப்புகளை அன்பளிப்பாக கொடுத்து உள்ளார். இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்பதும் அட்டை தொகுப்பிலே இடம்பெற்றிருக்கும். இந்த விளையாட்டுக்கு 'டெக் ஆப் கிங்ஸ்' என பெயரிடப்பட்டு உள்ளது.
அப்பா 'இந்த விளையாட்டை விளையாடுவதன் மூலம் எளிதாக மன்னர்களின் ஆட்சிக்காலம், பலம் உள்ளிட்டவற்றை மனப்பாடம் செய்யலாம். இந்திய வரலாறு மீது மாணவர்கள் ஆர்வம் கொள்ள வேண்டும் என்பதே என்னுடை ய இலக்கு' என்கிறார், அவர்.
