/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
16 நாட்களில் 10,675 கி.மீ., துாரம் பைக்கில் கடந்து வாலிபர் சாதனை நாட்களில் கி.மீ., துாரம்
/
16 நாட்களில் 10,675 கி.மீ., துாரம் பைக்கில் கடந்து வாலிபர் சாதனை நாட்களில் கி.மீ., துாரம்
16 நாட்களில் 10,675 கி.மீ., துாரம் பைக்கில் கடந்து வாலிபர் சாதனை நாட்களில் கி.மீ., துாரம்
16 நாட்களில் 10,675 கி.மீ., துாரம் பைக்கில் கடந்து வாலிபர் சாதனை நாட்களில் கி.மீ., துாரம்
ADDED : ஜூன் 01, 2025 06:42 AM

வளைவு, நெளிவு இல்லாமல் ஒரே நேர்கோட்டில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை இயக்குவது என்றால், எந்த வாகன ஓட்டிகளுக்கு தான் பிடிக்காது. குறிப்பாக 'லாங் டிரைவ்' எனும் நீண்ட பயணம் செய்பவர்களுக்கு சாலை நன்றாக இருந்தால் கொண்டாட்டம் தான். புல்லட் வேகத்தில் பறந்து செல்வர்.
இன்றைய இளம் தலைமுறையினருடன் பைக்கில் நீண்ட துாரம் சென்று வர வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. இதை சிலர் சாதனை முயற்சியாகவும் மேற்கொள்கின்றனர். இவர்களில் ஒருவர் துமகூரின் ஜஸ்வந்த் கவுடா, 18.
துமகூரில் இருந்து ஜம்முவின் உம்லிங்லா பாஸ் வரை மோட்டார் சைக்கிளில் சென்று வந்து உள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 25ம் தேதி துமகூரில் இருந்து தனியாக பைக்கில் புறப்பட்ட அவர், ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை கடந்து, 10,675 கி.மீ, துாரம் பயணம் செய்து, ஆகஸ்ட் 9ம் தேதி ஜம்முவை சென்றடைந்தார்.
விமானம்
ஜம்முவிலும் பல இடங்களை பைக்கிலேயே சுற்றி பார்த்துவிட்டு அங்கிருந்து திரும்பி வரும்போது, விமானத்தில் வந்துள்ளார்.
இந்த பயணம் குறித்து ஜஸ்வந்த் கவுடா கூறியதாவது:
எனக்கு ஏழு வயது இருக்கும்போதே பைக் ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. தந்தை வெளியே செல்லும்போது அவருடன் பைக்கில் செல்வேன். எனக்கு 14 வயது ஆனபோது, முதல்முறை ஸ்கூட்டர் ஓட்ட ஆரம்பித்தேன். பின், படிப்படியாக கியர் பைக்கும் ஓட்டினேன்.
எப்போது 18 வயது ஆகும், ஓட்டுநர் உரிமம் பெறலாம் என்று காத்திருந்தேன். 18 வயது ஆனதும் முதல் வேலையாக ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்து வாங்கினேன்.
ஓட்டுநர் உரிமம் கிடைத்ததும் என் முதல் நீண்ட துார பயணமாக, ஜம்மு சென்று வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
19,024 அடி உயரம்
போகும்போது நிறைய புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்தேன். பல மாநிலங்களின் மக்கள், கலாசாரத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உம்லிங்லா பாஸ் கடல் மட்டத்தில் இருந்து 19,024 அடி உயரத்தில் உள்ளது. பைக்கில் சென்றது புதிய அனுபவமாகவும், சவாலாகவும் இருந்தது.
இந்த பயணத்தின்போது கிடைக்கும் இடத்தில் துாங்கினேன். கிடைத்த உணவு உட்கொண்டேன். நான் எடுத்த புகைப்படம், வீடியோக்களை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்கு அனுப்பி வைத்தேன். அவர்கள், எனக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.
இது எனக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருந்தது.
இன்னும் பல மாநிலங்களுக்கு நீண்ட துார பயணம் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.