தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ நவீன விவசாயத்தில் லாபம் பார்க்கும் இளைஞர்

 நவீன விவசாயத்தில் லாபம் பார்க்கும் இளைஞர்

 நவீன விவசாயத்தில் லாபம் பார்க்கும் இளைஞர்


ADDED : செப் 26, 2026 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 11:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு பகுதியை சேர்ந்தவர் வினய், 27, எம்.பி.ஏ., முதுகலை பட்டதாரி. இவருக்கு விவசாயத்தில் ஆர்வம் அதிகம். 'மைக்ரோ கிரீன்ஸ்' எனப்படும் காய்கறி, கீரை, தானியங்கள், பயிறு வகைகளின் விதைகளில் இருந்து முளைத்து, இலைகள் வந்தவுடன் 1 முதல் 3 அங்குலம் உயரம் இருக்கும்போது கிடைப்பதாகும். இது, அதிக அளவு ஊட்டச்சத்து கொண்ட உணவுகளில் ஒன்றாகும். இதற்கு சூப்பர் மார்க்கெட்டுகளில் நல்ல மவுசு உண்டு.

இதில், இவர் அதிக ஈடுபாடு கொண்டார். தனது வீட்டின் அருகே சில மாதங்களுக்கு முன், கொட்டகை ஒன்று அமைத்தார். அந்த கொட்டகையை மைக்ரோகிரீன்ஸ் வளர்க்கும் அளவுக்கு தயார் செய்தார். இதற்காக, 8 லட்சம் ரூபாய் செலவு செய்தார்.

இவர் சோளம், ராகி, வெந்தயம், கடுகு, முள்ளங்கி, பீட்ரூட் உள்ளிட்ட விதைகளிலிருந்து மைக்ரோகிரீன்கள் உற்பத்தி செய்தார். பாரம்பரிய விவசாயம் போல, அறுவடைக்கு நீண்ட நாட்கள் காத்திருக்க தேவையில்லை. வெறும், 15 நாட்களில் அறுவடை செய்யலாம்.

அவ்வாறு, மாதம் இரண்டு முறை அறுவடை செய்தார். பின், உள்ளூர் சூப்பர் மார்க்கெட், சந்தைகளில் நேரடியாக மைக்ரோகிரீன்ஸை விற்பனை செய்தார். இதன் மூலம் மாதம், 50,000 ரூபாய் வருமானம் சம்பாதிக்கிறார்.

நவீன முறையில் விவசாயம் செய்தால் லாபம் ஈட்ட முடியும் என்பதற்கு, வினய் ஒரு எடுத்துக்காட்டாக உருமாறி உள்ளார். இதன் மூலம், வினய் முதலாளியாக மாறி உள்ளார். மற்றவர்களுக்கு வேலை வழங்கக்கூடிய அளவுக்கு முன்னேறி உள்ளார்.

இது குறித்து, அவர் கூறுகையில், “தொழில் துவங்க தைரியம் மிக அவசியம். அது என்னிடம் நிறையவே உள்ளது. விவசாயத்தின் மீதான ஆர்வத்தால், மைக்ரோகிரீன்ஸ் வளர்க்க துவங்கினேன். தற்போது, கடவுள் புண்ணியத்தில் நல்ல வருமானம் சம்பாதிக்கிறேன்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us