தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/அழகு/கோவை லேடீஸ் நகமெல்லாம் பூ!

கோவை லேடீஸ் நகமெல்லாம் பூ!

கோவை லேடீஸ் நகமெல்லாம் பூ!


ADDED : மார் 22, 2026 07:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 07:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கைக்கு மருதாணி இட்டு அழகுபடுத்திக் கொண்ட பெண்களின் விரல் நகங்களில் இன்று ஓவியங்கள் மின்னுகின்றன. இதுதான் இன்று டிரெண்ட்.

பெண்களின் நகங்களை ஓவியமாக மாற்றும் நெயில் ஆர்ட் ஸ்டுடியோ நகர பெண்களை நகரவிடாமல் இழுக்கிறது. கபிலாவின் வர்ணாலய நெய்ல்ஸ் பை கபி ஸ்டுடியோ அத்தனை பிரபலம்.

நெயில் பாலிஷ், நெயில் எக்ஸ்டென்ஷன், ப்ரெஷ்- ஆன் நெயில், பிரைடல் நெயில் ஆர்ட் என பல்வேறு நெயில் ஆர்ட் ஸ்டைல்கள் உள்ளன. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் அன்றாட ஆடைக்கும் ஏற்றவாறு, தனிப்பட்ட டிசைன்கள் உருவாக்குவது இன்றைய பேஷன் என்கிறார் கபிலா.

''மெஹந்தி ஆர்டிஸ்ட்டா இருந்தேன். அம்மா எவ்வளவு வேலை இருந்தாலும் நகங்களுக்கு பாலிஷ் போடுவார். அந்த பழக்கம்தான் எனக்கும் வந்துருச்சு. கஸ்டமர் வீடுகளுக்கு போய் நெய்ல் ஆர்ட் பண்ணினேன். கல்யாண பொண்ணுகளுக்கு நெய்ல் ஆர்ட் செய்யும் போது சில அசவுகரியங்கள் இருந்துச்சு.

அதனால ஸ்டுடியோ துவங்கினேன். காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் மட்டுமில்லாம, ஆபீஸ் போற லேடீஸ், ஹவுஸ் ஒய்ப்சும் வர்றாங்க. 40 தாண்டுன லேடீஸ் ரொம்ப இன்ட்ரஸ்டா இருக்காங்க. நெய்ல் ஆர்ட் ஒரு மாசம் வரை நிக்கும்'' என்கிறார்.

''நெய்ல் ஆர்ட்டுக்கு நான் அடிமை. மாசா மாசம் திருப்பூர்ல இருந்து இதுக்குன்னே வர்றேன். டென்ஷனா இருக்கும் போது கைவிரல் நகத்தை பார்த்தால் மனசு லேசாகுது. பாசிட்டிவ் பீல் வருது,'' - விஜயலட்சுமி வாடிக்கையாளர்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us