/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
அழகு
/
மூக்கின் மேல் கரும்புள்ளியா?- கையிலேயே இருக்கு தீர்வு..!
/
மூக்கின் மேல் கரும்புள்ளியா?- கையிலேயே இருக்கு தீர்வு..!
மூக்கின் மேல் கரும்புள்ளியா?- கையிலேயே இருக்கு தீர்வு..!
மூக்கின் மேல் கரும்புள்ளியா?- கையிலேயே இருக்கு தீர்வு..!
UPDATED : ஆக 27, 2023 01:04 PM
ADDED : ஆக 27, 2023 12:50 PM

இளம் தலைமுறையினர் பலரும் சரும பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். அதிலும் மூக்கின் மேல் பகுதியில் கரும்புள்ளி, சொரசொரப்பு தன்மை வருகிறது. இவை சருமத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். எண்ணெய் பசை அதிகம் உள்ள சருமத்தை கொண்டவர்கள் தான் அதிகம் எதிர்கொள்ளக் கூடும். இதற்குக் காரணம் சருமத்துளைகளில் இருந்து வெளிவரும் எண்ணெயானது வெளியேறாமல் அடைபடும் போது, சருமத்தின் மென்மை தன்மையைத் தடுத்து கரும்புள்ளி உருவாகக் காரணமாகிறது.
இந்த பிரச்னையை போக்க பலரும் ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் பலன் கிடைக்கவில்லை என புலம்பி வரும் நிலையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நிரந்தர தீர்வு காணலாம்.
உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை வட்டவடிவில் நறுக்கி அதை மூக்கின் மேல் பகுதியில் சிறிது நேரம் மஜாஜ் செய்வது போல் தேய்த்து, பின்னர் தண்ணீரால் முகத்தைக் கழுவி வந்தால் கரும்புள்ளி மற்றும் சொரசொரப்பு தன்மை மறையும்.
தேன்

தேனை லேசாகச் சூடு செய்து அதனுடன் வெள்ளைச் சர்க்கரையைக் கலந்து மூக்கின் மேல் பகுதியில் சிறிது நேரம் மஜாஜ் செய்து, தண்ணீரால் கழுவினால் கரும்புள்ளி மற்றும் சொரசொரப்பு தன்மை நீங்கும்.
இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை பொடியுடன் தேன் கலந்து மூக்கின் மேல் பகுதியில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.
தக்காளி

தக்காளியை கூழாா அரைத்து கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி பின்னர் தண்ணீரைக் கொண்டு கழுவினால் எண்ணெய் பசை நீங்குவதோடு கரும்புள்ளியும் மறையும்.
கடலை மாவு
![]() |
கருப்பு காராமணி

கருப்பு காராமணியைத் தண்ணீர் சேர்த்து பசை போல் அரைத்து, அதை மூக்கின் மேல் பகுதியில் தடவி, பின்னர் தண்ணீரால் கழுவினால் கரும்புள்ளி மறையும்.


