sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

அழகு

/

 உதட்டோடு உறவாட வேண்டாமே லிப்ஸ்டிக்

/

 உதட்டோடு உறவாட வேண்டாமே லிப்ஸ்டிக்

 உதட்டோடு உறவாட வேண்டாமே லிப்ஸ்டிக்

 உதட்டோடு உறவாட வேண்டாமே லிப்ஸ்டிக்


ADDED : ஜன 04, 2026 05:29 AM

Google News

ADDED : ஜன 04, 2026 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளிர்காலம் தொடங்கி விட்டாலே நம் கவனம் முழுவதும், சரும பராமரிப்பின் மீதுதான் இருக்கும். முகத்துக்கும் கைகளுக்கும் காட்டும் அக்கறையை, நாம் பெரும்பாலும் உதடுகளுக்குக் காட்டுவதில்லை. ஆனால், இந்த சீசனில் சருமத்தை போலவே, உதடுகளையும் பராமரிப்பது அவசியம் என்கிறார், பிரபல அழகு கலை நிபுணர் ரம்யா.

நாக்கை அடக்குங்கள் * உதடுகள் வறண்டு போகும்போது, பலரும் செய்யும் பொதுவான தவறு, நாக்கினால் ஈரப்படுத்துவது. இவ்வாறு அடிக்கடி எச்சில் செய்வதால், உதடுகள் மேலும் வறட்சியடைந்து, கருமை நிறமாக (பிக்மென்டேஷன்) மாற வாய்ப்புள்ளது. எனவே, இந்த பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மணமில்லாத லிப் பாம் * உதடுகளில் பிக்மென்டேஷன் அதிகமாக இருப்பவர்கள், தரமான லிப் பாம் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, லிப் பாமில் எந்தவிதமான செயற்கை நறுமணமும் (Fragrance- free) இருப்பது கூடாது. நறுமணம் கலந்த லிப் பாம், எதிர்பார்த்த பலனை தராது.

உதடுகளை தடவுங்கள் * முகத்திற்கு ஸ்கிரப்பர் பயன்படுத்தும் போது, மறக்காமல் உதடுகளிலும் மென்மையாகத் தடவி ஸ்கிரப் செய்ய வேண்டும். இது உதடுகளில் உள்ள இறந்த செல்களை நீக்கி, இதழ்களை மென்மையாக்க உதவும்.

உறங்கும் போது லிப்ஸ்டிக் * லிப்ஸ்டிக் போட்டு வெளியில் சென்று வந்தவுடன், இரவு உறங்க செல்வதற்கு முன் முழுமையாக நீக்க வேண்டும். லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டே உறங்குவது, உதட்டின் ஆரோக்கியத்தை கெடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.






      Dinamalar
      Follow us