UPDATED : ஜூலை 19, 2026 08:30 AM
ADDED : ஜூலை 18, 2026 04:41 PM

ஹேண்ட் பேக்கில் இந்த சின்ன பொருள் இருந்தாலே போதும்… எப்போது வேண்டுமானாலும் சில நொடிகளில் முகத்தை புத்துணர்ச்சியுடன் மாற்றலாம்.
அதனால்தான், மேக்கப் விரும்புவோரின் லேட்டஸ்ட் பேவரைட் ஆக மாறியுள்ளது 'பாக்கெட் பிளஷ்' என்கிறார் அழகுக்கலை நிபுணர் பிரின்சி.
கன்னங்களுக்கு இயற்கையான 'ரோஸி' நிறத்தை தரும் கிரீம் அல்லது பால்ம் வகை பிளஷ்கள் தான் இவை. பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், இதை கையாளும் விதம் முகத்தின் தோற்றத்தை அப்படியே மாற்றிவிடும்.
மேக்க செய்த பிறகு, விரல் நுனியாலோ அல்லது சின்ன ஸ்பாஞ்ச் கொண்டோ கன்னங்களில் லேசாகத் தடவி, மேல்நோக்கித் தேய்த்தால்... முகம் பளிச்சென்று பொலிவுடன் ஜொலிக்கும்.
மல்டி பயன்பாடு
இந்த பிளஷ் வெறும் கன்னங்களுக்கு மட்டும்தானா என்றால் இல்லை. சரியான தயாரிப்பை தேர்வு செய்தால், உதடுகளுக்கும், கண் இமைகளுக்கும் இதையே மினி மேக்கப் ஆக பயன்படுத்தலாம். மூக்கின் மேல் பகுதியில் லேசாக தடவினால், வெயிலில் நடந்து வந்தது போன்ற அந்த இயற்கையான நேச்சுரல் பிரஷ் லுக் கிடைக்கும்.
பவுடர் போடுவதற்கு முன்பே இந்த கிரீம் பிளஷை பூசுவதுதான் பெஸ்ட். ஏற்கனவே பவுடர் போட்டிருந்தால், பிளஷைத் தடவும்போது அழுத்தித் தேய்க்காமல், மெதுவாக தட்டி (Tap) பயன்படுத்த வேண்டும்.
பீச், பிங்க், பெர்ரி, கோரல் (பவள நிறம்), ரோஸ் என உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ற ஷேட்களைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் எப்போதும் நேச்சுரல் பியூட்டி தான். சின்னதாக, அழகாக, எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்த வசதியாக இருப்பதால், இளம் தலைமுறையினரின் ஹாட் பேவரைட் ஆக மாறியுள்ளது இந்த பாக்கெட் பிளஷ்.
