UPDATED : செப் 20, 2026 08:19 AM
ADDED : செப் 19, 2026 02:11 PM

இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் பரவிய “லேயர்ஸ் ஹேர்கட்” ஸ்டைல், இளம் தலைமுறையைக் கடந்து 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களையும் ஈர்த்து வருகிறது.
முன்பு சலூன் சேவைகள் குறித்து தயக்கம் கொண்டிருந்த பெண்கள், தற்போது அமோனியா இல்லாத ஹேர் கலர், சல்பேட் குறைந்த ஷாம்பூ போன்ற பாதுகாப்பான தயாரிப்புகள் அறிமுகமானதால் நம்பிக்கையுடன் முன்வருகின்றனர்.
நிபுணர்களின் சரியான வழிகாட்டுதலும் இதற்கு துணை செய்கிறது. இன்றைய பெண்களுக்கு, அழகு என்பது வெளிப்புற மாற்றம் மட்டுமல்ல; அது மனநிறைவும், தன்னம்பிக்கையும் தரும் ஒரு அனுபவமாக மாறியுள்ளது.
இதில், பராமரிக்க எளிதான லேயர்ஸ் கட் ஹேர்ஸ்டைல், வேலைப்பளு அதிகமான பெண்களிடம் விரைவாகப் பரவி வருகிறது.
தங்களிடம் வரும் பெண்கள், இந்த ஸ்டைலை செய்து கொண்ட பிறகு இளம் தோற்றத்தையும், புதிய தன்னம்பிக்கையையும் பெறுகிறார்கள் என்கிறார், ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் உள்ள Dyms Salon ேஹர் ஸ்டைலிஸ்ட்.
