வேகமாக காய்ந்து விடுகிறது இந்த ஜெல் நெயில் பாலிஷ்!
வேகமாக காய்ந்து விடுகிறது இந்த ஜெல் நெயில் பாலிஷ்!
UPDATED : அக் 11, 2026 08:16 AM
ADDED : அக் 10, 2026 03:54 PM

நகங்களை பளபளப்பாகவும் அழகாகவும் மாற்றும் நெயில் பாலிஷ்களில், சாதாரண நெயில் பாலிஷுக்கும் ஜெல் பாலிஷுக்கும் இடையே சில முக்கிய வித்தியாசங்கள் உள்ளன என்கிறார் பியூட்டிசன் பிரின்சி.
சாதாரண நெயில் பாலிஷை போட்டவுடன், முழுமையாக உலர குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் எடுக்கும். ஆனால் ஜெல் பாலிஷ் அப்படி இல்லை.
எல்.இ.டி., பல்பின் வெளிச்சத்தில் வைத்தால், ஒன்றரை நிமிடத்தில் காய்ந்துவிடும். அல்ட்ரா வயலட் ரேஸ் வாயிலாக உலர வைக்கப்படுவதால், மிக வேகமாக உலர்வது இதன் சிறப்பு.
சாதாரண நெயில் பாலிஷை விட ஜெல் நெயில் பாலிஷ் அதிக நாட்கள் அதாவது இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை மங்காமல் அப்படியே நீடிக்கும். அதேசமயம், இந்த பாலிஷை நகங்களிலிருந்து நீக்குவதும் கவனமாக செய்ய வேண்டிய ஒரு வேலையாகும்.
இந்த ஜெல் பாலிஷை அடிக்கடி பயன்படுத்தினால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது. திருமணம் மற்றும் விசேஷ நிகழ்வுகள் போன்ற முக்கியமான நாட்களில் மட்டும் பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.
