UPDATED : மே 10, 2026 09:18 AM
ADDED : மே 09, 2026 05:42 PM

தற்போது இளசுகளின் லேட்டஸ்ட் பேஷன் தேர்வாக, 'கலர் ஐ லென்ஸ்' மாறியுள்ளது.
முன்பு கண் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் மட்டுமே கண்ணாடிக்கு மாற்றாக கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தி வந்தனர். இன்று அந்த நிலைமை முற்றிலும் மாறியுள்ளது.
கண் பராமரிப்புக்கான ஒரு சாதனமாக மட்டுமல்லாமல், அணியும் ஆடைகளுக்கும், தனிப்பட்ட தோற்றத்திற்கும் ஏற்ற நாகரிக அணிகலனாக கலர் ஐ லென்ஸ்கள் பார்க்கப்படுகின்றன என்கிறார், அழகியல் கலை நிபுணர் ஐஸ்வர்யா.
ஆண்களுக்கும் மேட்ச் கண் லென்ஸ் என்றாலே அது பெண்களுக்கு மட்டுமானது என்ற காலம் மலையேறிவிட்டது. தற்போது பல விசேஷங்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருமே தங்கள் ஆடைகளுக்கும், மேக்கப்பிற்கும் பொருத்தமான லென்ஸ் தேர்வு செய்து அசத்துகின்றனர்.
நீங்கள் பெரிய மாற்றத்தை விரும்பவில்லை, ஆனால் கண்கள் மட்டும் சற்று ப்ரைட் ஆக தெரிய வேண்டும் என நினைத்தால், பழுப்பு அல்லது ஹேசல் நிறத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இது உங்கள் முகத்திற்கு ஒரு மென்மையான அழகைத் தரும்.
கண்களை கவர்ச்சியாகவும், எடுப்பாகவும் காட்ட விரும்புபவர்களின் முதல் சாய்ஸ் நீல நிறம்தான். இதில் பல ஷேடுகள் கிடைக்கின்றன. உங்கள் சரும நிறத்திற்கு எது பொருத்தமாக இருக்கும் என ஆலோசித்து தேர்வு செய்யலாம்.
உலகிலேயே பச்சை நிறக் கண்கள் கொண்டவர்கள் குறைவு. எனவே, ஒரு கூட்டத்தில் நீங்கள் மட்டும் தனித்துவமாக தெரிய வேண்டும் என விரும்பினால், தாராளமாக பச்சை நிற லென்ஸ் ட்ரை செய்யலாம்.
