ADDED : ஜூன் 11, 2023 09:09 PM

அனைத்து வயதினரும் சந்திக்கும் பொதுவான பிரச்னைகளில் ஒன்று நகச் சொத்தை பிரச்னை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், நகங்களை முறையாக பராமரிக்காததே காரணமாகும். இந்த பிரச்னையை
ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் இல்லையென்றால்
பலவித நோய்களுக்கு வழி வகுப்பதுடன், கால் மற்றும் கை விரல்களின் அழகும்
கெட்டுவிடும்.
இதற்காக நாம் அதிகளவில் செலவும் செய்யும், மருத்துவரைத் தேடியும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இயற்கை முறையில் நகச் சொத்தையை சரிசெய்யலாம்.
கீழாநெல்லி
கீழாநெல்லி இலையுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து அரைத்து இரவில் நகச் சொத்தை உள்ள இடத்தில் தடவி, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இதேபோல் ஒருவாரம் செய்தால் குணமாகும்.
படிகாரம்
படிகாரத்தைச் சிறிதளவு எடுத்து ஊறவைத்து பேஸ்ட் போல் அரைத்து இரவு தூக்குவதற்கு முன்பு நகச் சொத்தை உள்ள இடத்தில் தடவி, மறுநாள் வெதுவெதுப்பான தண்ணீர் கழுவினால் குணமாகும்.
