/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
அழகு
/
மஸ்காரா போட்டு மயக்க ஆசையா? அதன் விளைவுகளைத் தெரிஞ்சுகோங்க..!
/
மஸ்காரா போட்டு மயக்க ஆசையா? அதன் விளைவுகளைத் தெரிஞ்சுகோங்க..!
மஸ்காரா போட்டு மயக்க ஆசையா? அதன் விளைவுகளைத் தெரிஞ்சுகோங்க..!
மஸ்காரா போட்டு மயக்க ஆசையா? அதன் விளைவுகளைத் தெரிஞ்சுகோங்க..!
UPDATED : ஏப் 04, 2023 08:03 PM
ADDED : ஏப் 04, 2023 08:00 PM

மஸ்காரா. இன்றைய மார்டன் பெண்களின் முக்கிய ஒப்பனை பொருட்களில் ஒன்று. மஸ்காரா, லிப்ஸ்டிக், ரோஸ் பவுடர் என்கிற சாகாவரம் பெற்ற காம்பினேஷன் மேக்கப் அணியாத கல்லூரிப் பெண்கள் குறைவு. மஸ்காரா எவ்வாறு தயாராகிறது என யாருக்காவது தெரியுமா? கண்களுக்கு அழகு சேர்க்கும் கருமை நிற மஸ்காராவின் தயாரிப்பின்போது பலவித ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. தினசரி கண்களில் மஸ்காரா அணிவதால் உடலுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா, இதன் தயாரிப்பின்போது என்னென்ன வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன எனத் தெரிந்துகொள்வோம்.
மற்ற அழகு சாதனங்கள்போல மஸ்காராவிலும் ஏகப்பட்ட வேதிபொருட்கள் அடங்கி உள்ளன. இவை இன்றி மஸ்காரா தயாரிப்பது சாத்தியமன்று. ஆனால், இந்த வேதிப்பொருட்களின் தரம் மிக முக்கியம்.
பெட்ரோலியம் சுத்திகரிப்புப் பொருட்கள், அலுமினியம் பவுடர், பாராபென் உள்ளிட்ட ரசாயனங்கள் மஸ்காராவில் உள்ளன. தொடர்ந்து பல ஆண்டுகள் மஸ்காரா பயன்படுத்தும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் தாக்க அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்க சூழலியல் பாதுகாப்பு அமைப்பு கூறுகிறது.
மஸ்காரா சில மணி நேரம் மட்டுமே கண் இமைகளில் படிந்திருக்க வேண்டும். பல மணிநேரம் இருந்தால் உங்கள் இமைகளில் கெட்ட பாக்டீரியா தொற்று உண்டாக வாய்ப்பு அதிகரிக்கும்.
மஸ்காரா பயன்படுத்துவோருக்கு இமைகளைக் காக்கும் மெல்லிய முடிகள் கொட்ட வாய்ப்பு அதிகம். இதனால் கண்களுக்கு தூசு, வியர்வையிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்காது.
![]() |
மஸ்காரா கண்களின் வெள்ளைப் படலத்தில் பட்டால் அது கண் நரம்புகளை பாதிக்கும். எனவே,மிகக் குறைந்த அளவு மஸ்காராவை கண்களில் படாமல் தடவுவது பாதுகாப்பானது.
மஸ்காரா போட்ட சில மணி நேரத்தில் முகத்தை நன்கு கழுவி விடுவது உங்கள் ஆரோக்கியத்தைக் காக்க உதவும்.


