/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
அழகு
/
உங்கள் முகத்துக்கு ஏற்ற பொட்டு எது?
/
உங்கள் முகத்துக்கு ஏற்ற பொட்டு எது?
UPDATED : அக் 05, 2025 09:15 AM
ADDED : அக் 04, 2025 11:32 PM

எவ்வளவு தான் மேக்கப் போட்டாலும், நெற்றியில் இடும் ஒரு சிறிய பொட்டு, முகத்திற்கு முழுமையான அழகு சேர்க்கும்.ஆனால், எல்லா முகவடிவத்திற்கும், எல்லா விதமான பொட்டும் பொருந்துவதில்லை.
உங்கள் முகம் வட்ட வடிவில் இருந்தால், நீளவாக்கில் இருக்கும் பொட்டுகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது. இது உங்கள் முகத்திற்கு ஒரு நீள்வட்டத் தோற்றத்தைக் கொடுக்கும்.
* வட்ட வடிவ முகத்திற்கு, சிறிய அளவிலான வட்டப் பொட்டுகளும் அழகாக பொருந்தும். பெரிய, அகலமான பொட்டுகளை தவிர்ப்பது நல்லது.
* டைமண்ட் வடிவ முகத்தில், நெற்றி சிறியதாகவும், தாடை கூர்மையாகவும் (Sharp) இருக்கும். இந்த முகவடிவம் கொண்டவர்கள், அதிர்ஷ்டசாலிகள். இவர்கள் எந்த வடிவ பொட்டையும் நம்பிக்கையுடன் வைக்கலாம். அழகாகப் பொருந்தும்.
* சதுர வடிவ முகம் கொண்டவர்களுக்கு, நெற்றி மற்றும் தாடையின் அகலம் ஏறக்குறைய சமமாக இருக்கும். இவர்கள் தங்கள் முகத்தின், கூர்மையான வளைவுகளை மென்மையாகக் காட்ட, 'மூன்றாம் பிறை' வடிவத்தில் பொட்டு வைப்பது பொருத்தமாகஇருக்கும்.
இதய வடிவ முகமா... சிறிய பொட்டு பெஸ்ட்!
இதய வடிவ முகம் கொண்டவர்களுக்கு, கன்ன எலும்புகள் (Checkbones) அகலமாகவும், தடை (Chin) குறுகலாகவும் இருக்கும். இந்த மாதிரியான முகவடிவம் உள்ளவர்கள், சிறிய அளவிலான பொட்டு வைத்தால், அது அவர்களின் முகத்தின் மேல் பகுதியின் அகலத்தை குறைத்து காட்டி, முகத்திற்கு ஒரு சமசீரான தோற்றத்தை கொடுக்கும்.