/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
பேஷன்
/
கோடை வெப்பத்தில் இருந்து காக்கும் பீர் நிரப்பப்பட்ட பேஷன் ஜாக்கெட்..!
/
கோடை வெப்பத்தில் இருந்து காக்கும் பீர் நிரப்பப்பட்ட பேஷன் ஜாக்கெட்..!
கோடை வெப்பத்தில் இருந்து காக்கும் பீர் நிரப்பப்பட்ட பேஷன் ஜாக்கெட்..!
கோடை வெப்பத்தில் இருந்து காக்கும் பீர் நிரப்பப்பட்ட பேஷன் ஜாக்கெட்..!
UPDATED : செப் 22, 2023 03:44 PM
ADDED : செப் 22, 2023 03:43 PM

சிங்கப்பூரில் 1932 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பீர் தயாரிப்பு நிறுவனம் டைகர் பீர். இந்த டைகர் பீர் நிறுவனம் தற்போது உலகின் நூறு நாடுகளுக்கு மேல் கிளைகள் பரப்பி உள்ளது. டைகர் பீர் தயாரிப்பு நிறுவனம் 'குடி' மகன்களின் பேரவரைட்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. ஆண்டுக்கு பல கோடி டாலர் ஈட்டும் இந்த பீர் நிறுவனம் தற்போது பேஷன் துறையிலும் காலடி பதித்துள்ளது.
பேஷன் துறையில் லெதர் ஜாக்கெட்கள் பிரபலம். பெரும்பாலும் இவை துருவத்தை ஒட்டிய குளிர்ப் பிரதேசங்களில் குளிரில் இருந்து காக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் தற்போது டைகர் பீர் நிறுவனம் ஒரு மஞ்சள் நிற ஜாக்கெட்டை உருவாக்கியுள்ளது. இதன் சிறப்பம்சம் இந்த ஜாக்கெட்டின் உட்பகுதியில் பீர் நிரப்பட்டு இருக்கும். காலாகாலமாக வெப்பமண்டல நாடுகளிலேயே குளிர்ச்சியான மது ரகமான பீர் அதிகமாக விற்பனையாகும்.
![]() |
பீர் நிரப்பட்ட இந்த வாட்டர் பெட் போன்ற ஜாக்கெட்டை ஒருவர் அணிந்துகொண்டால் வெப்பம் தகிக்கும் கோடையிலும் உடல் 5 டிகிரி செல்சியஸ்வரை குளிர்ச்சி அடையும் என இந்த ஜாக்கெட் விளம்பரப் படுத்தப்படுகிறது. தற்போது இந்த ஜாக்கெட்டை வாங்க பலர் போட்டிபோட்டு வருகின்றனர். வாட்டர் ரெசிஸ்டண்ட் ஆன இந்த ஜாக்கெட்டில் அவ்வப்போது பீர் நிரப்பிக்கொள்ளவும் அதனை வெளியேற்றவும் வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


