தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/பேஷன்/கடலை மாவில் இருந்து கலர்புல் கிளே மாஸ்க்

கடலை மாவில் இருந்து கலர்புல் கிளே மாஸ்க்

கடலை மாவில் இருந்து கலர்புல் கிளே மாஸ்க்


UPDATED : அக் 04, 2026 10:25 AM

ADDED : அக் 03, 2026 03:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 10:25 AM ADDED : அக் 03, 2026 03:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு காலத்தில் முக பராமரிப்பு என்றாலே வீட்டில் இருக்கும் கடலை மாவு, பாசிப்பயறு மாவு, சந்தனம் போன்ற இயற்கைப் பொருட்கள்தான்.

பாட்டி, அம்மா சொல்லிக்கொடுத்த பழைய அழகு குறிப்புகள், இன்றைய தலைமுறையிலும் வேறு வடிவத்தில் தொடர்கின்றன. இப்போது அந்த இடத்தை விதவிதமான வண்ணங்களில் கிடைக்கும் கிளே பேஸ் மாஸ்க் பிடித்துள்ளது.

பச்சை, இளஞ்சிவப்பு, நீலம், ஊதா, கருப்பு என பல வண்ணங்களில்மட்டுமின்றி, சருமத்தின் தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு வகைகளும் அறிமுகமாகி வருகின்றன. பார்க்க கவர்ச்சியாக இருப்பதுடன், சருமத்தில் உள்ள அதிகப்படி எண்ணெயை உறிஞ்சவும் செய்கின்றன.

வீட்டில் மாவை கலந்து முகத்தில் பூசிய காலம் மாறி, இன்று தயாராக இருக்கும் மாஸ்க்கை முகத்தில் தடவி சில நிமிடங்களில் கழுவும் காலம் வந்துவிட்டது.

ஆனால், வண்ணம் கவர்ந்து இழுக்கிறது என்பதற்காக எந்த முகப்பூச்சையும் பயன்படுத்தாமல், உங்கள் சரும தன்மைக்கு ஏற்றதை தேர்வு செய்வது முக்கியம்.

அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதும் சருமத்தில் வறட்சி அல்லது எரிச்சலை ஏற்படுத்தலாம். மாறியது மாஸ்க்கின் வடிவமும் வண்ணமும் தான், முகப் பராமரிப்பின் மீதான ஆர்வம் அப்படியேதான் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us