UPDATED : அக் 11, 2026 08:23 AM
ADDED : அக் 10, 2026 05:24 PM

கோவை: நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும் பேஷன் ட்ரெண்டில், இளைஞர்களின் ஆல்-டைம் பேவரைட் என்றால் அது 'பிரிண்டட் டீ-ஷர்ட்' தான்.
ஆனால், இப்போது ட்ரெண்ட் கொஞ்சம் ரூட் மாறியிருக்கிறது. டீ-ஷர்ட்டின் முன்பக்கம் பிரம்மாண்டமான டிசைன்கள் அல்லது பிரிண்ட்கள் இருப்பதைவிட, முன்பக்கம் சிம்பிளாகவும், பின்பக்கம் அசத்தலான பெரிய டிசைன்கள் மற்றும் வாசகங்கள் அச்சிடப்பட்ட டீ-ஷர்ட்டுகளையே இளைஞர்கள் அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக, பைக் ரைடர்ஸின் புதிய சாய்ஸ் இதுவாக உள்ளது.
இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் கபிஷ் கூறுகையில், சின்ன வயசுல டீ-ஷர்ட் வாங்கும்போது முன்பக்கம் என்ன படம் அல்லது டிசைன் இருக்குன்னு பார்த்து வாங்குவேன். ஆனா இப்போ அப்படி இல்லை; பின்பக்கம் என்ன பிரிண்ட் இருக்குன்னு பார்த்துதான் எடுக்குறேன். குறிப்பா, நாம பைக்ல போகும்போது நமக்கு பின்னாடி வர்றவங்க நம்ம டீ-ஷர்ட் மெசேஜைப் பார்த்து ஒரு கணம் கவனிப்பாங்க... அது ஒரு தனி திரில் என்று கூறி சிரிக்கிறார்.
