தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ உடுப்பி ஹெப்ரியில் சாகச படகு சவாரி

 உடுப்பி ஹெப்ரியில் சாகச படகு சவாரி

 உடுப்பி ஹெப்ரியில் சாகச படகு சவாரி


ADDED : ஏப் 23, 2026 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 04:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

உடுப்பி மாவட்டம் ஆன்மிகத்துக்கு மட்டுமல்ல, சுற்றுலாவுக்கும் பிரசித்தி பெற்ற இடமாகும்.

குறிப்பாக, உடுப்பி - ஆகும்பே சாலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஹெப்ரி கிராமம் அமைந்துள்ளது. சீதா நதி உற்பத்தியாகி, மழை காடுகள் வழியாக 70 கி.மீ., தொலைவுக்கு பாய்ந்து அரபிக்கடலில் சங்கமிக்கிறது.

இந்த கிராமம் அருகில் கரடு முரடான வனத்தின் நடுவே, பாயும் யாரும் அறியாத நீரோடைகள் சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்துளள்ன.

இங்கு ஆண்டு முழுதும் படகு சாகசம் செய்ய வாய்ப்பு இருந்தாலும், பருவமழை காலமான ஜூன் முதல் அக்டோபர் காலகட்டத்தில் இங்கு பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் படகு சாகத்தை அனுபவிக்க பலர் ஆர்வமுடன் வருகின்றனர்.

பருவமழை காலகட்டத்தில் துாய்மையாகவும், வெண்மையாகவும் இருக்கும் நீரில் சாகச படகு சவாரி செய்யலாம். நீச்சல் தெரியாதவர்களும் கூட, முதல் முறையாக சாகச படகு சவாரி செய்ய, சீதா நதி ஏற்ற இடமாகும். குடும்பத்துடன் வார இறுதி நாளை கழிக்க, ஹெப்ரி சாகச படகு சவாரி ஏற்ற இடமாகும்.

ரப்பர் படகில் கடக்க ஆறு முதல் எட்டு மணி நேரமாகலாம். படகில் சவாரி செய்வதற்கு முன் பாதுகாப்பு நடவடிக்கைகள், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்படும். இவர்களுடன் வழிகாட்டியும், உயிர் பாதுகாப்பு கவசங்களும் வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us