sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

சுற்றுலா

/

 உடுப்பியில் 'டைம் டிராவல்' செய்யலாமா?

/

 உடுப்பியில் 'டைம் டிராவல்' செய்யலாமா?

 உடுப்பியில் 'டைம் டிராவல்' செய்யலாமா?

 உடுப்பியில் 'டைம் டிராவல்' செய்யலாமா?


ADDED : பிப் 05, 2026 06:22 AM

Google News

ADDED : பிப் 05, 2026 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுப்பி மாவட்டம், மணிப்பாலில் ஹஸ்த ஷில்பா பாரம்பரிய அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகம் விஜயநாத் ஷெனாய் என்பவரால் கட்டப்பட்டது. இது, ஏழு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திறந்தவெளி அருங்காட்சியகம். நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. இங்கு பாரம் பரிய ஜவுளி, பாத்திரங்கள், கைவினைப்பொருட்கள், பொம்மைகள் உள்ளன.

இங்கு கதவுகள், வின்டேஜ் கார், மியூசிக் சாதனம், சிற்பம், நாற்காலி என அனைத்தும் பழமையை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. இங்கு வந்தவுடன் ஏதோ 'டைம் டிராவல்' செய்து 18ம் நுாற்றாண்டுக்கு சென்றது போல தோன்றும்.

இது, வீடு போல அமைக்கப்பட்டிருப்பதால், வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் இடம் பெற்றுள்ளன.

வீட்டின் மேற்கூரையில் ஓவியங்களை பார்க்கலாம். இந்த வீட்டுக்குள் நுழைந்தால் மீண்டும் வெளியே வர வேண்டும் என நினைப்பே வராது. அவ்வளவு அமைதியாக, அழகாக இருக்கும். வீட்டின் கூரையில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பார்ப்பதற்கு அருமையாக இருக்கும்.

மொத்தத்தில் மொபைல் போனை 'ஆப்' செய்து விட்டு, சிறிது நேரம் நிம்மதியாக சுற்றிப் பார்க்கலாம். நண்பர்களுடன் செல்வது சிறப்பு. இந்த அருங்காட்சியகத்தை வெளிநாட்டினர் பலரும் பார்த்து ரசிக்கின்றனர்.

அருங்காட்சியகம் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை திறந்திருக்கும். டிக்கெட் கட்டணம் ஒரு நபருக்கு 300 ரூபாய். மாணவர்களுக்கு 100 ரூபாய் மட்டுமே.

எப்படி செல்வது?

பஸ்: எங்கிருந்தாலும் முதலில் உடுப்பி பஸ் நிலையத்திற்கு வர வேண்டும். அங்கிருந்து, 6 கி.மீ., தொலைவில் உள்ள அருங்காட்சியகத்தை ஆட்டோவில் சென்று அடையலாம்.

ரயில்: உடுப்பி ரயில் நிலையத்திற்கு வர வேண்டும். அங்கிருந்து ஆட்டோ மூலம் அருங்காட்சியகத்தை அடையலாம்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us