தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/மனதை மயக்கும் ஒடெயரபாள்யா! னதை யக்கும்

மனதை மயக்கும் ஒடெயரபாள்யா! னதை யக்கும்

மனதை மயக்கும் ஒடெயரபாள்யா! னதை யக்கும்


UPDATED : நவ 26, 2026 12:00 AM

ADDED : நவ 25, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 12:00 AM ADDED : நவ 25, 2026 07:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

பரபரப்பான நகர வாழ்க்கையை விட்டு, விலகி சென்று சிறிது நேரம் அமைதியாக பொழுது போக்க விரும்புகிறீர்களா... உங்களை வரவேற்க ஒடெயரபாள்யா காத்திருக்கிறது. இங்கு பசுமையை, பனிப்பொழிவின் அழகை ரசிக்கலாம்.

விடுமுறை கிடைத்தால் போதும், நண்பர்களுடன், குடும்பத்துடன் அல்லது தனியாக சுற்றுலா செல்ல வேண்டும் என, பலரும் விரும்புவர். இயற்கை எழில் மிகுந்த வனங்கள், நீர்வீழ்ச்சி, மலை பிரதேசங்களை தேடுவர்.

கர்நாடகாவில் சுற்றுலா பயணியர் விரும்பும் சுற்றுலா தலங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் சில சுற்றுலா தலங்கள், மக்களுக்கு தெரிவதில்லை. இவற்றில் ஒடெயரபாள்யாவும் ஒன்றாகும்.

சொர்க்கம்



பொதுவாக, சாம்ராஜ்நகருக்கு வரும் சுற்றுலா பயணியர், மலை மஹாதேஸ்வரா மலை, வன விலங்குகள் சரணாலயம் உட்பட, சில இடங்களை பார்க்கின்றனர்.

இங்கு இயற்கை அழகை தன்னுள்ளே ஒளித்து வைத்துள்ள ஒடெயரபாள்யாவை பற்றி, பலருக்கும் தெரியவில்லை.

பசுமை சூழ்ந்த வனம், மலைகள், மலைகளை முத்தமிடும் பனித்துளிகள், உடலை இதமாக வருடும் குளிர்ந்த காற்று என, அற்புதமான அனுபவத்தை பெறலாம்.

சாம்ராஜ்நகரின், கொள்ளேகாலில் உள்ள ஒடெயரபாள்யா இயற்கை ஆர்வலர்களின் சொர்க்கம். குளிர் காலத்தில் அதிகாலை இங்கு தென்படும் அழகை வர்ணிக்க, வார்த்தைகளே இல்லை.

மலைகளின் மீது பனி படரும் காட்சியின் அழகை ரசிக்க, இரண்டு கண்கள் போதாது.

காதை குடையும் வாகன சத்தம், வெறுப்பை ஏற்படுத்தும் போக்குவரத்து நெரிசல், பணிச்சுமை என, இயந்திரமய வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, சில மணி நேரம் நிம்மதியாக பொழுது போக்க விரும்புவோருக்கு, ஒடெயரபாள்யா 'பெஸ்ட் சாய்ஸ்.'

நமது பொறுப்பு



இன்றைய நாட்களில் மக்கள் நெரிசல் மிகுந்த, பிரபலமான சுற்றுலா தலங்களை விட, எந்த ஆர்ப்பரிப்பும் இல்லாத, அமைதியான அபூர்வமான இடங்களை தேடி செல்வது அதிகரிக்கிறது.

அரசும், சுற்றுலா துறையும் ஒடெயரபாள்யாவின் இயற்கை சூழலுக்கு பாதிப்பு இல்லாமல், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தினால். இந்த இடமும் பிரபலமடையும். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

இயற்கை, நமக்கு கொடுத்துள்ள அழகான பரிசு, இந்த இடம். இதை பாதுகாத்து வைத்திருப்பது நமது பொறுப்பு. சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணியர், பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பையை வீசியெறிந்து சுற்றுச்சூழலை அசுத்தமாக்க கூடாது. தாவரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது. இயற்கையை மதிக்க வேண்டும்.

எப்படி செல்வது?


பெங்களூரில் இருந்து, 140 கி.மீ., மைசூரில் இருந்து 61 கி.மீ., மாண்டியாவில் இருந்து 63 கி.மீ., சாம்ராஜ்நகரில் இருந்து 41 கி.மீ.,யில் கொள்ளேகால் உள்ளது. கர்நாடகாவின் அனைத்து நகரங்களில் இருந்தும், கொள்ளேகாலுக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது.
அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்: சிவசமுத்ரா நீர்வீழ்ச்சி, பரசுக்கி, ககனசுக்கி, குண்டல் அணை, காவேரி வன விலங்குகள் சரணாலயம், மலைமஹாதேஸ்வரா மலை, பிளிகிரி ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us