தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ பாறையில் செதுக்கப்பட்ட குளு குளு குகைக்கோவில்

 பாறையில் செதுக்கப்பட்ட குளு குளு குகைக்கோவில்

 பாறையில் செதுக்கப்பட்ட குளு குளு குகைக்கோவில்


ADDED : பிப் 24, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 05:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோலார் மாவட்டத்தில் சிந்தாமணி அருகேயுள்ளது கைலாசநாதர் கோவில். குடவரை கோவிலான இது, சிவபெருமான், பார்வதி மற்றும் விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அமைதியான அனுபவத்தை தரும் இந்தக் கோவில், பெங்களூரில் இருந்து, 80 கிலோ மீட்டரிலும், ஹொஸ்கோட்டில் இருந்து, 40 கிலோ மீட்டரிலும் உள்ளது.

சிவபெருமான் சதுர்முக லிங்கேஸ்வரர் என்றும், பார்வதி தேவி ஜெகதம்பே என்றும், விநாயகர் வல்லப கணபதி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

பாறையில் செதுக்கப்பட்ட அமைதியான கு கைக்கோவில், சற்று குளுமையாக இருக்கும். இயற்கையான அழகுடன் கூடிய ஆன்மிக தலமாகும். அடிவாரத்தில் சிறிய கடைகளில் தண்ணீர், சிற்றுண்டிகள் கிடைக்கும். குரங்குகள் இருப்பதால் உணவை கையில் வைத்திருக்க வேண்டாம்.

பார்க்கிங் இடத்திலிருந்து குகைக்கு 200 படிக்கட்டுகள் ஏற வேண்டும். வசதியான காலணிகளை அணிந்து கொள்ள வேண்டும்.

பெங்களூரில் இருந்து அரை நாள் பயணத்திற்கு ஏற்ற இடமாகும். இயற்கை மற்றும் ஆன்மிகம் இணைந்த அமைதியான அனுபவத்தை விரும்புவோருக்கு இந்த இடம் ஒரு நல்ல தேர்வாகும். சிவ பக்தர்கள் மன நிறைவுக்கு ஏற்றதாக திகழும் கோவிலாக உள்ளது.

தரிசனம் நேரம்: காலை, 9:30 முதல் இரவு 8:00 மணி வரை கோவில் திறந்திருக்கும். நுழைவு கட்டணம் இல்லை. வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us