தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ 'டிரெக்கிங்' செல்வதற்கு ஏற்ற நாராயணகிரி மலை

 'டிரெக்கிங்' செல்வதற்கு ஏற்ற நாராயணகிரி மலை

 'டிரெக்கிங்' செல்வதற்கு ஏற்ற நாராயணகிரி மலை


ADDED : ஜன 22, 2026 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 05:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூருக்கு மிக அருகில் உள்ள ராம்நகரில், 'டிரெக்கிங்' செல்வதற்கு ஏற்ற நிறைய இடங்கள் உள்ளன. இதில் ஒன்று நாராயணகிரி மலை. ராம்நகரில் இருந்து 20 கி.மீ., துாரத்தில் உள்ள ஜலமங்களா என்ற கிராமத்தில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,800 அடி உயரத்தில் மலை உச்சி அமைந்து உள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து உச்சிக்கு செல்ல 560 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

படிக்கட்டுகளில் பாதி துாரம் சென்று பார்க்கும் போது, கண்ணுக்கு எட்டிய துாரம் வரை பசுமையான காட்சி அளிக்கிறது. கிராமங்கள், ஏரிகள், பண்ணை வீடுகளை கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மஞ்சனபெலே அணையின் பரந்து விரிந்த நீர்நிலையையும் கண்டு ரசிக்கலாம். படிக்கட்டுகளில் ஒரே சீராக செல்வதால், மலை உச்சிக்கு செல்வதில் அவ்வளவாக சிரமம் இருக்காது.

மலை உச்சியில் லட்சுமி நாராயணா கோவில் உள்ளது. இங்கு தரிசனம் முடிந்த பின், அங்குள்ள பாறைகள் மீது அமர்ந்து நேரத்தை செலவழிக்கலாம். சில சுற்றுலா பயணியர், மலை உச்சியில் சிறிய கூடாரம் அமைத்து தங்கியிருந்து, மாலையில் சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசித்துவிட்டு, கீழே இறங்கி வருகின்றனர்.

மலையேற்றம் துவங்க உள்ள இடத்திற்கு 1 கி.மீ., துாரத்திற்கு முன்பே, வாகனங்களை நிறுத்தி நடந்து செல்வது நல்லது. சாலைகள் கரடுமுடாக இருப்பதால், டயர் பஞ்சர் ஆக கூட வாய்ப்பு உள்ளது.

நண்பர்களுடன் ஒரு நாள் டிரெக்கிங் செல்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது. செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை இங்கு செல்ல ஏற்ற காலம்.

பெங்களூரில் இருந்து நாராயணகிரி மலை 75 கி.மீ., துாரத்தில் உள்ளது. பஸ்சில் செல்வோர் ராம்நகர் சென்று அங்கிருந்து, டவுன் பஸ் மூலம் ஜலமங்களா கிராமம் செல்லலாம். ஆட்டோ வசதியும் உள்ளது. ரயில் சென்றாலும் ராம்நகர் ரயில் நிலையத்தில் இறங்கி செல்ல வேண்டும்.

-- நமது நிருபர் --

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us