தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/காண்போரை கவரும் சிக்லிஹொலே நீர்த்தேக்கம்

காண்போரை கவரும் சிக்லிஹொலே நீர்த்தேக்கம்

காண்போரை கவரும் சிக்லிஹொலே நீர்த்தேக்கம்


UPDATED : அக் 08, 2026 12:14 AM

ADDED : அக் 07, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 12:14 AM ADDED : அக் 07, 2026 08:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

குடகு மாவட்டத்தில் பல சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில், பலரும் அறியாத சுற்றுலா தலங்களும் ஏராளம். அவ்வகையில், குடகின் தனித்துவ அழகான சிக்லிஹொலே நீர்த்தேக்கமும் ஒன்று. இது, ஒரு அமைதியான சுற்றுலா தலம். இங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்காது. இதனால், நேரத்தை அமைதியான முறையில் செலவிட ஏற்ற இடமாக இருக்கும்.

காவிரி ஆற்றின் கிளை நதியான சிக்லிஹொலே ஆற்றின் குறுக்கே இந்த அணை உள்ளது. இது, குடகின் மடிகேரி மற்றும் குஷால் நகருக்கு இடையை, அத்துார் வனப்பகுதியில் அமைதியாக அமைந்துள்ளது. துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால், புகழ்பெற்ற துபாரே யானைகள் முகாமிலிருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ளது.

இந்த அணையின் சிறப்பம்சமே, தண்ணீரை திறந்து விடுவதற்கு மதகுகள் எதுவும் கிடையாது என்பது தான். மழைக்காலங்களில் நீர் அதிகமாக இருக்கும் போது, உபரி நீரானது, அரை வட்ட வளைவில் தானாகவே வழிந்தோடும்.

இது பார்ப்பதற்கு, பால் பொங்கும்போது ஏற்படும் நுரை போல இருக்கும். இது, பார்ப்பதற்கு விந்தையாக இருக்கும். இதை அருகிலிருந்து பார்த்து ரசிக்க முடியும். இங்கு செல்வதற்கு நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது.

அணையில் நீர் அதிகமாக இருக்கும் சமயத்தில் பாதுகாப்பாக இருப்பது முக்கியம். ஏனெனில், முதலை இருப்பதாக எச்சரிக்கை பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. கேமரா, மொபைல் போன்களில் படங்கள் எடுக்க சிறந்த இடம்.

தினமும் காலை 8:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. வாகனங்கள் நிறுத்த கட்டணம் கிடையாது.

ஜூன் முதல் மார்ச் வரை பருவமழை மற்றும் குளிர்காலங்களில் செல்வது சிறப்பு. கோடை காலங்களில் அணை பெரும்பாலும் வறண்டு இருக்கும். அணைக்கு அருகில் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், ஏராளமான உணவுகள் உண்டு.

எப்படி செல்வது?


பஸ்: பெங்களூரிலிருந்து, 230 கி.மீ., தொலைவில் குடகு மாவட்டத்தின் குஷால்நகர் உள்ளது. பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்திலிருந்து பஸ் மூலம் நேரடியாக குஷால்நகரை அடையலாம். அங்கிருந்து டாக்சி மூலம், 13 கி.மீ., தொலைவில் உள்ளசிக்லிஹொலே நீர்த்தேக்கத்தை அடையலாம்.
இப்பகுதிக்கு நேரடியாக ரயிலில் வர பாதைகள் எதுவும் கிடையாது. எனவே, பஸ் அல்லது சொந்த வாகனத்தில் வருவதே சிறந்தது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us