தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ பார்ப்போரை பிரமிக்க வைக்கும் ககன் மஹால் கோட்டை

 பார்ப்போரை பிரமிக்க வைக்கும் ககன் மஹால் கோட்டை

 பார்ப்போரை பிரமிக்க வைக்கும் ககன் மஹால் கோட்டை


ADDED : ஏப் 09, 2026 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 02:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

விஜயபுராவில் பல மன்னர்களின் கோட்டைகள் இன்றும் கம்பீரமாக வீற்றிருக்கின்றன. இவற்றில் பல கோட்டைகளை சுற்றுலா பயணியர் பார்ப்பதற்கு அனுமதி உண்டு. இவ்வகையில் பிரபல சுற்றுலா தலமான ஹம்பிக்கு அருகில், ககன் மஹால் கோட்டை கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இக்கோட்டை, 16ம் நுாற்றாண்டில் விஜயபுராவின் ஐந்தாவது சுல்தானான அலி ஆதில் ஷாவின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

இக்கோட்டை, தற்போதும் பிரமாண்டமாக இருக்கிறது. இதை சுற்றிப்பார்க்க அனைவருக்கும் அனுமதி உண்டு. 60 அடி உயரமுள்ள மதில் சுவர்கள் பார்ப்போரை பிரமிக்க வைக்கும். கோட்டையை சுற்றி பார்ப்பதற்கு கட்டணம் கிடையாது. காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை சுற்றி பார்க்கலாம். அக் டோ பர் முதல் மார்ச் வரை குளிர்காலத்தில் சுற்றி பார்ப்பது சிறந்ததாக இருக்கும்.

கட்டட கலை

கோட்டையில் செய்யப்பட்டுள்ள வேலைப் பாடுகளை பார்த்து ரசிக்கலாம். அக்காலத்தில், கட்டடக் கலைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்துக்கு எடுத்துக்காட்டாக கோட்டை விளங்குகிறது. இங்கு போட்டோ எடுத்து மகிழலாம். இங்குள்ள புல் தரைகள் நல்ல நிலைமையில் பராமரிக்கப்பட்டு உள்ளன.

அதில், உட்கார்ந்தும், படுத்து கொண்டும் கோட்டையின் அழகை ரசிக்கலாம்.

குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாக இருக்கும். குறிப்பாக, குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

கோட்டையை சுற்றி பல வராலற்று நிகழ்வுகள் நடந்து உள் ளன. இதை தெரிந்து கொண்டு கோட்டையை சுற்றி பார்ப்பது மேலும் சிறப்பாக இருக்கும். கோட்டை வரலாறு குறித்த புத்தகங்கள், கோட்டைக்கு வெளிப்புறம் உள்ள கடைகளில் குறைந்த விலைக்கே கிடைக்கின்றன.

இந்த புத்தகங்களை கட்டாயம் வாங்கி படிப்பது சிறப்பாக இருக்கும். வரலாற்றை அறிந்து கொண்டு, அதை குழந்தைகளுக்கு சொல்லி மகிழலாம்.

குழந்தைகளின் மகிழ்ச்சியே பெற்றோரின் மகிழ்ச்சி. அதனால், சிரமப்படாமல் சில காரியங்களை செய்து தான் ஆக வேண்டும்.

இல்லையெனில், வழிகாட்டி யாரையாவது பணம் கொடுத்து ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லும் போது, வரலாற்றையும் தெரிந்து கொண்டு வருவதே உசிதம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us