தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ மனதை மயக்கும் ஹிரேகொளலே ஏரி

 மனதை மயக்கும் ஹிரேகொளலே ஏரி

 மனதை மயக்கும் ஹிரேகொளலே ஏரி


ADDED : ஆக 05, 2026 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 11:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

மனதை லேசாக்கும் அமைதியான சூழ்நிலை, இதமான தென்றல், சலசலவென பாயும் தண்ணீர், கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, பசுமையான இயற்கை காட்சிகள். இவற்றை ரசிக்க வேண்டுமானால் ஹிரேகொளலே ஏரிக்கு வாருங்கள்.

சிக்கமகளூரு நகரில், ஹிரேகொளலே ஏரி உள்ளது. இது, சிக்கமகளூரு மக்களின் உயிர் நாடியாக விளங்குகிறது. 10 ஏக்கரில் அமைந்துள்ளது. கோடைக்காலத்திலும் இதில் நீர் நிரம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மலை சிகரங்களில் இருந்து பாய்ந்து வந்து, ஏரியை அடைவதை பார்ப்பதே, தனி சுகமாகும். ஏரி நீரில் சிறப்பு குணங்கள் நிறைந்துள்ளன.

தற்போது மழை பெய்துள்ளதால், ஏரியில் அதிகமான தண்ணீர் நிரம்பியுள்ளது. சுற்றுப்பகுதியில் பசுமையாக காட்சி அளிக்கிறது. கடந்த சில நாட்களாக, சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கர்நாடகாவின் பல்வேறு நகரங்களில் இருந்தும், இங்கு வருகின்றனர். கரையை தாண்டி பாயும் நீரை கண்டு மகிழலாம். சந்திரதுரோண மலைத் தொடர்ச்சியை காண வரும் சுற்றுலா பயணியர், ஹிரேகொளலே ஏரியையும் காண வருகின்றனர். குறிப்பாக, இளைஞர்கள், இளம்பெண்கள், காதலர்களுக்கு பிடித்தமான இடம் இதுவாகும். சுற்றிலும் பரவியுள்ள காபி தோட்டங்கள், ஏரியின் அழகை அதிகரிக்கின்றன.

மலைகள், பசுமையான இயற்கை காட்சிகளுக்கு இடையே, படுத்து கிடக்கும் இந்த ஏரியில் பல திரைப்பட படப்பிடிப்புகள் நடந்துள்ளன.

சிக்கமகளூருக்கு சுற்றுலா செல்வோர், மாலை சூரியன் அஸ்தமனமாகும் போது, இந்த ஏரிக்கு சென்றால் அற்புதமான காட்சியை காணலாம். சூரியன் ஏரிக்குள் சென்று மறைவதை போல இருக்கும்!

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து, 241 கி.மீ., மங்களூரில் இருந்து 148 கி.மீ., மைசூரில் இருந்து, 172 கி.மீ., தொலைவில் சிக்கமகளூரு உள்ளது. சிக்கமகளூரில் இருந்து 9 கி.மீ., தொலைவில், ஹிரேகொளலே ஏரி அமைந்துள்ளது. அனைத்து நகரங்களில் இருந்து, சிக்கமகளூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. சிக்கமகளூரில் இறங்கி, வாடகை வாகனத்தில் ஏரிக்கு செல்லலாம். மாலை நேரத்தில் சென்றால், சூரிய அஸ்தமனத்தின் அழகை ரசித்து, அழகான சூழ்நிலையில் பொழுது போக்கிவிட்டு, மகிழ்ச்சியாக திரும்பலாம். நேரம்: காலை 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை. கட்டணம் எதுவும் இல்லை. ஏரியில் படகு சவாரி இல்லை. அருகில் உள்ள பிற சுற்றுலா தலங்கள்: முல்லய்யன கிரி, பாபாபுடன் கிரி மலை, ஜரி நீர்வீழ்ச்சி.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us