/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
சுற்றுலா போற்றுதும் சுற்றுலா போற்றுதும்
/
சுற்றுலா போற்றுதும் சுற்றுலா போற்றுதும்
UPDATED : செப் 28, 2025 09:11 AM
ADDED : செப் 28, 2025 08:02 AM

பரபரப்பான வாழ்க்கை சூழலுக்கு இயற்கையும், அது சார்ந்த விஷயங்களும் மனதுக்கு ஆறுதல் அளிக்கும். அதுவும், இதமான காலநிலையும், இயற்கையும் கலந்த சூழலில் சில மணி நேரம் செலவழிப்பது, உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, உள்ள ஆரோக்கியத்துக்கும் உகந்தது. இது, சுற்றுலா சார்ந்த ஒரு விஷயமும் கூட.
இதனை உணர்த்தும் விதமாக தான், ஆண்டுதோறும், செப். 27ம்தேதி உலக சுற்றுலா தினமாக கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில், திருமூர்த்திமலை, ஸ்ரீ பரஞ்ஜோதி யோகா கல்லுாரியில் கொண்டாட்டம் நடந்தது.
நிகழ்ச்சியில், பங்கேற்ற மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், ''இந்தாண்டு உலக சுற்றுலா தினத்தின் மையக்கருத்து, 'சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம்' என்பதே.
சுற்றுலா தளங்கள், அவற்றின் சிறப்பு, முக்கியத்துவம், சுற்றுலாவை உள்ளடக்கிய இயற்கை மற்றும் அது சார்ந்த விஷயங்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு வரின் கடமை. அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தான் இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன,'' என்றார். யோகா கல்லுாரி ஆசிரியர்கள், சுற்றுலா தொழில் முனைவோர் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் பலரும் உரையாற்றினர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. யோகாவும் செய்து காண்பிக்கப்பட்டது.
பின், எழில்மிகு திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர், சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா தொழில் முனைவோர் இணைந்து, துாய்மைப்பணி மேற்கொண்டனர். சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.