/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
மன அமைதியை ஏற்படுத்தும் வே ணுா ர் கி ரா ம ம்
/
மன அமைதியை ஏற்படுத்தும் வே ணுா ர் கி ரா ம ம்
ADDED : ஜூலை 16, 2025 11:14 PM

தட்சிண கன்னடா மாவட்டம், பல்குனி நதிக்கரையில் அழகாக அமைந்துள்ளது வேணுார் கிராமம். இது சிறிய கிராமமாக இருந்தாலும், பல வரலாற்று சிறப்புகளை உடையது. இது முந்தைய காலத்தில் சமண மதத்தின் சிறப்பிடமாக விளங்கியது. அஜில வம்சத்தின் தலைநகராக இருந்தது. அப்போது, கி.பி. 1604ல் 35 அடி உயரமுள்ள பாகுபலி கோமதேஸ்வரரின் உருவ சிலை நிறுவப்பட்டது.
சுற்றுலா பயணியர்
இந்த கோமதேஸ்வரர் சிலையை காண தினமும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். பெரும்பாலும் குடும்பத்துடன் வருகின்றனர்.
இங்கு உள்நாட்டு சுற்றுலாப் பயணியர் மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்தவர்களும் வருகின்றனர். இதனால், வேணுார் கிராமமே பெரும்பாலும் சுற்றுலாப் பயணியரால் நிரம்பி இருக்கும்.
இங்கு வருவோர் பலரும் தங்கள் மொபைல் போன்களில் மும்முரமாக படம் எடுப்பதை பார்க்க முடியும். கர்நாடகாவில் ஒற்றை கல்லால் செய்யப்பட்ட அதிக உயரமுள்ள, ஐந்து சிலைகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த சிலை அமைதி, அகிம்சை, தியானம் போன்றவற்றை பிரதிபலிக்கிறது.
தியானம்
இங்கு வரும் பலரும் மன நிம்மதியுடன் செல்வதாக தெரிவிக்கின்றனர்.
இந்த கிராமத்தில் தியானம் செய்ய ஏதுவாக பல இடங்கள் உள்ளன. இங்கு வரும் பலரும் தியானத்தில் ஈடுபடுவதை பார்க்கலாம். இது ஒரு புது விதமான சுற்றுலா அனுபவத்தை நிச்சயம் தரும். சுற்றுலா பயணியர் தங்குவதற்கு ஒரு லாட்ஜும் உள்ளது. அந்த பகுதியில் உள்ள பெயரிடப்படாத பூங்காவும் உள்ளது.
அந்த பூங்கா முற்றிலும் மரங்களால் நிறைந்து பசுமையாக காணப்படுகிறது. அங்கும் பலரும் தியானம் செய்து வருகின்றனர். வேணுார் கிராமத்திற்கு வருவோர் அருகிலுள்ளு தர்மஸ்தலா செல்லாமல் திரும்புவதில்லை.
சுற்றுலாவில் பல வகைகள் இருந்தாலும், மன அமைதியை தரும் சுற்றுலாக்கள் குறைவு. அப்படி செல்வோரின் மனதை சாந்தப்படுத்தும் விதமாகவும், மன அமைதியை தரும் வகையிலும் உள்ளது வேணுார் கிராமம்.
இங்கு மரங்கள், செடி, கொடிகள் நிறைந்து பச்சை, பச்சையாக காட்சி அளிக்கிறது. சாலையில் செல்லும் போதே ஒரு மன நிறைவு ஏற்படுகிறது.
- நமது நிருபர் -