sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 03, 2026 ,பங்குனி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

டெக்னாலஜி

/

ஸ்மார்ட்போன் & கேட்ஜெட்ஸ்

/

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-க்கு வைஃபை, டிஷ் டிவி, அரசு கேபிள் எது சிறந்தது?

/

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-க்கு வைஃபை, டிஷ் டிவி, அரசு கேபிள் எது சிறந்தது?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-க்கு வைஃபை, டிஷ் டிவி, அரசு கேபிள் எது சிறந்தது?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-க்கு வைஃபை, டிஷ் டிவி, அரசு கேபிள் எது சிறந்தது?


UPDATED : ஜூலை 03, 2022 05:16 PM

ADDED : ஜூலை 03, 2022 05:12 PM

Google News

UPDATED : ஜூலை 03, 2022 05:16 PM ADDED : ஜூலை 03, 2022 05:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்றைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி உள்ளது. ஆண்ட்ராய்டு டிவி தாயாரிப்பில் எல்ஜி, சாம்சங்க், சோனி உள்ளிட்ட டிவி நிறுவனங்களுடன் ஒன் பிளஸ், ரெட்மி, மீ உள்ளிட்ட சீன நிறுவனங்களும் போட்டி போடத் துவங்கிவிட்டன. இந்த டிவியில் கேபிள், டிஷ், வைஃபை இணைப்புகளை கொடுத்து வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் குழந்தைகள்வரை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும், புதிதாக ரிலீஸ் ஆகிய திரைப்படங்களையும் கண்டு களிக்கின்றனர். ஸ்மார்ட் டிவி வைத்திருப்போருக்கு பயனுள்ள சில தகவல்களைக் காணலாம்.

Image 966716


*மார்கெட்டில் இன்று சன் ரைரக்ட், டாடா ஸ்கை உள்ளிட்ட பல டிஷ் நிறுவங்களில் களமிறங்கிவிட்டன. டிஷ் டீவி வைத்திருப்பவர்கள் மாதாமாதம் 300-500 ரூபாய் தொகையை கட்ட வேண்டியிருக்கும். ஆனால் டிஷ் டிவிக்கு தனியாக மாத சந்தா கட்டி, ஸ்மார்ட் டிவி பைஃபை-க்கு தனியாக சந்தா கட்டினால் மாதாந்திர டிஷ் மற்றும் வைஃபை செலவு 1500 ரூபாயைத் தாண்டிவிடும். இதனால் உங்கள் மாத பட்ஜெட்டில் துண்டு விழலாம். இதனை அறிந்துகொண்ட ஜியோ பைபர், ஏர்டெல், ஆக்ட் உள்ளிட்ட வைஃபை நிறுவங்கள் நூறுக்கும் மேற்பட்ட தனியார் தொலைக்காட்சிகளை இணையம் மூலம் வழங்கும் சேவைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த பிளானில் ரீசார்ஜ் செய்தால் மாத சந்தா குறையும்.

*இன்று 15-க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்கள் அறிமுகமாகியுள்ள நிலையில் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய முன்னணி தளங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுவருகின்றன. வைஃபை பிளான்களில் ஓடிடி தளங்கள் பல இலவசமாக அளிக்கப்படுகின்றன. இதில் சிறந்த பிளானை தேர்வு செய்து நீங்கள் வீட்டிலிருந்தபடியே புதிய படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வெப் சீரீஸை கண்டு களிக்கலாம்.

*இன்று வாடிக்கையாளர்கள் பலர் 50 இஞ்சுக்கு மேற்பட்ட பெரிய திரை கொண்ட ஆண்ட்ராய்டு 4கே ஹெச்டிஆர் டிவிக்களை வாங்க விரும்புகின்றனர். இவற்றில் காட்சித்துல்லியம் அடங்கிய 4கே ஹெச்டி காட்சிகளை காணவே பலர் விருப்பம் காட்டுகின்றனர். கட்டணத்துக்கு ஏற்ப நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்கள் எச்டி சேவைகளை வழங்கி வருகிறது. முடிந்தவரை தனியார் சேனல்களையும் ஹெச்டியில் பெறுவது நல்லது. பெரிய திரையில் சாதாரண எஸ்டி வீடியோக்கள் பிக்ஸலேட் ஆகும்.

Image 966718


*ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல், ரெய்ல்வயர், ஹாத்தவே, ஆக்ட் உள்ளிட்ட வைஃபைகளில் எதனைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் பலருக்கு இருக்கும். ஒவ்வொரு நெட்வொர்கிலும் ஆஃபர்கள், இணைய ஸ்டீரிமிங் வேகம், இதர சலுகைகள் மாறுபடும். ஆனால் இந்த மூன்று விஷயங்களில் இணைய ஸ்டீரிமிங் வேகமே முக்கியமானது என்பதை கவனத்தில் கொள்க. அதிக கண்டெண்ட்களை வைத்துக்கொண்டு, பார்க்க நினைக்கும்போது இணைய வேகம் குறைந்து இணையம் அடிக்கடி ஹேங் ஆகினால் அதிருப்தி ஏற்படும்.

*தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு கேபிள் உரிமத்தை டெண்டர் விடும். இதில் வெற்றி பெறுவோர் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு ஒரு பகுதிக்கு அவர்களது டிஷ் மூலமாக கட்டண கேபிள் சேவை வழங்குவர். இதுபோன்ற அரசு கேபிள்களில் சில பின்னடைவுகள் உள்ளன. சில சமயங்களில் இதில் நாம் விருப்பப்படும் சேனல் இல்லாமல் போகலாம். முக்கியமான சேனல் சாதாரண எஸ்டி தரத்தில் இருக்க வாய்ப்புள்ளது. மாத சந்தாவை குறிப்பிட்ட அவகாசத்துக்குள் கட்டவில்லை என்றால் இணைப்பு துண்டிக்கப்படும்.

*டிஷ் டீவியில் இதுபோன்ற பிரச்னைகள் கிடையாது. நமக்குத் தேவையான சேனல்களை மட்டுமெ சப்ஸ்கிரைப் செய்துகொள்ளலாம். உதாரணத்துக்கு ஐபிஎல் சீசன் வரும்போது ஸ்போட்ஸ் சேனல் பேக்குகளை சப்ஸ்கிரைப் செய்துகொள்ளலாம். ஆனால் அரசு டெண்டர் கேபிளைக் காட்டிலும் பெரும்பாலான டிஷ் நிறுவனங்கள் அதிக மாத கட்டணம் வசூலிப்பதை கவனத்தில் கொள்க.

*அப்பா, அம்மா, குழந்தைகள், தாத்தா, பாட்டி அடங்கிய பெரிய குடும்பம் என்றால் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப அதிக சேனல்கள், ஓடிடி தளங்களை கண்டுகளிக்க கிட்டத்தட்ட 2 ஆயிரம் ரூபாயைத் தொடும் காம்போ வைஃபை பேக்குகள் தேர்வு செய்வது நல்லது. கணவன், மனைவி மட்டுமே உள்ள சிறிய குடும்பம் என்றால் பேசிக் வைஃபை பேக்குகளை எடுத்துக்கொண்டு, தேவையான ஓடிடி தளங்களை மட்டும் சப்ஸ்கிரைப் செய்துகொள்ளலாம். இதனால் பணம் மிச்சமாகும்.






      Dinamalar
      Follow us