ஸ்பார்க் 10 ப்ரோ மூன் எக்ஸ்புளோரர் எடிஷன்; சந்திரயான் 3-ஐ கொண்டாடும் டெக்னோ!
ஸ்பார்க் 10 ப்ரோ மூன் எக்ஸ்புளோரர் எடிஷன்; சந்திரயான் 3-ஐ கொண்டாடும் டெக்னோ!
UPDATED : செப் 09, 2023 08:43 PM
ADDED : செப் 09, 2023 08:40 PM

டெக்னோ மொபைல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் 'மூன் எக்ஸ்புளோரர் எடிஷன்' (Moon Explorer Edition) மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
அதிவேக பெர்ஃபாமன்ஸ் மற்றும் தனித்துவமான டிசைன் கொண்ட ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பெயர் போன நிறுவனமான டெக்னோ, தனது பேன்டம் சீரிஸ் மூலம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அதன்பின் ஃபோல்டபிள் மற்றும் ரோலபிள் போன்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ள டெக்னோ மொபைல் நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் தனது ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் 'மூன் எக்ஸ்புளோரர் எடிஷன்' (Moon Explorer Edition) மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
![]() |
நிலவை நோக்கி பயணம் செய்துள்ள சந்திரயான்-3 (Chandrayaan-3) திட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதனை கவுரவப்படுத்தும் விதமாகவே இந்த ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் 'மூன் எக்ஸ்புளோரர் எடிஷன்' (Moon Explorer Edition) மாடலை டெக்னோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த தோற்றம், சந்திரயான் 3 நிலவு திட்டத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில், 6.78 இன்ச் FHD+ 90Hz ரிப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. அதுமட்டுமல்லாமல், மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர் மாலி G52 GPU ப்ராஸசர் மற்றும் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஹை ஒ.எஸ். 12.6-ல் இயங்குகிறது.
![]() |
இந்த ஸ்பார்க் 10 ப்ரோ 'மூன் எக்ஸ்புளோரர் எடிஷன்' 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. விர்ச்சுவல் ரேம் 128 ஜி.பி. மெமரி ஸ்டோரேஜுடன் வருகிறது. கேமராவை பொறுத்தவரை, 50MP டூயல் கேமரா செட்டபுடன் கிடைக்கிறது. செல்ஃபி மற்றும் வீடியோ கால் அழைப்புகளுக்கு 32MP கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
![]() |
டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மூன் எக்ஸ்புளோரர் எடிஷன் மாடல் பிளாக் அண்ட் வைட் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் லெதர் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிய நிலையில், இதன் விற்பனை செப்டம்பர் 15-ம் தேதி துவங்க உள்ளது.



