தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஸ்பெஷல்/அறிந்துகொள்வோம்/அப்துல் கலாம் நினைவுதினம்; இணையத்தில் பகிரப்படும் நினைவுக் குறிப்புகள்..!

அப்துல் கலாம் நினைவுதினம்; இணையத்தில் பகிரப்படும் நினைவுக் குறிப்புகள்..!

அப்துல் கலாம் நினைவுதினம்; இணையத்தில் பகிரப்படும் நினைவுக் குறிப்புகள்..!


UPDATED : ஜூலை 27, 2023 01:39 PM

ADDED : ஜூலை 27, 2023 12:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2023 01:39 PM ADDED : ஜூலை 27, 2023 12:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்று முன்னாள் பாரத குடியரசுத் தலைவர் மற்றும் இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானி ஏபிஜே அப்துல் கலாமின் எட்டாவது நினைவுதினம். கடந்த 2015 ஆம் அண்டு தனது 83 ஆவது வயதில் மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் மரணம் அடைந்த அவரது உடல், அவது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவுச் சின்னமாக இன்றளவும் போற்றப்படுகிறது. அப்துல் கலாம் உருவாக்கிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை குறித்த முக்கியத் தகவல்களை அவரது நினைவு தினத்தன்று தெரிந்துகொள்வோம்.

'பேலிஸ்டிக் மிசைல்' எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து இலக்கைத் தாக்கும் அதிநவீன ஏவுகணைகள் உலகில் பல நாடுகளில் பாதுகாப்புக்காக தயாரிக்கப்படுகின்றன. அணு ஆயுதம், ஏவுகணை உள்ளிட்டவை உலக அமைதியை சீர்குலைகும் என உலக நாடுகளுக்கு அறிவுறுத்தப்படும் போதிலும் தாய்நாட்டின் பாதுகாப்பு கருதி இதுபோன்ற ஏவுகணை தயாரிப்பு தேவைப்படுவதை மறுப்பதற்கில்லை.

1980 ஆம் ஆண்டு அப்துல் கலாம் தலைமையில் உருவாக்கப்பட்ட இண்டகிரேட்டட் கைடட் மிசைல் டெவலப்மென்ட் ப்ரோக்ராம் (Integrated Guided Missile Development Program) செயல்திட்டத்தில் அக்னி ஏவுகணை உருவாக்கப்பட்டது. அப்துல் கலாமின் அக்னி ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதையடுத்து இன்று அக்னி ஏவுகணைகள் பல பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

Image 1146451


முன்னதாக ஒடிசா அருகே உள்ள அப்துல் கலாம் தீவில் அக்னி-1 ஏவுகணை ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இன்று அமெரிக்கா, சீனா, ரஷ்யா, வடகொரியா போல ஏவுகணை கையிருப்பு மற்றும் பரிசோதனையில் இந்தியாவும் முன்னணி வகித்து வருவதற்கு அப்துல் கலாமே காரணம் என்றால் அது மிகையில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us