தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறிந்துகொள்வோம்/உலகின் டாப் 10 அழகிய நூலகங்கள் பற்றி அறிவோமா ?

உலகின் டாப் 10 அழகிய நூலகங்கள் பற்றி அறிவோமா ?

உலகின் டாப் 10 அழகிய நூலகங்கள் பற்றி அறிவோமா ?


UPDATED : மே 22, 2023 07:05 PM

ADDED : மே 22, 2023 07:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 22, 2023 07:05 PM ADDED : மே 22, 2023 07:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. அட்மோண்ட் அபே நூலகம் :

ஆஸ்திரியாவில் உள்ள அட்மோண்ட் அபே நூலகம் உலகளவில் அழகான நூலகங்களுள் ஒன்றாகும். 1776ல் கட்டப்பட்ட இந்த நூலகம்

2. லைப்ரரி ஆப் காங்கிரஸ் :



உலகின் மிகப்பெரிய நூலகமாக அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ் விளங்குகிறது.

Image 1115819


3. போட்லியன் நூலகம் :

பிரிட்டனில் உள்ள போட்லியன் நூலகம், ஐரோப்பியாவில் பழமையான நூலகங்களுள் ஒன்றாகும். 1602ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த நூலகத்தில், 14ம் நூற்றாண்டை சேர்ந்த

பல புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

4. டிரினிட்டி கல்லூரி நூலகம் :

அயர்லாந்தில் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த நூலகத்தில் அழகிய மரவேலைப்பாடுகள், புகழ்பெற்ற தத்துவ மேதைகளின் பளிங்கு உருவங்கள் பார்ப்போரை கவரும்

வகையில் அமைந்திருக்கும்.

5. பைபிலியோடெகா வாஸ்கான்சிலோஸ் :

மெக்ஸிகோவில் உள்ள பைபிலியோடெகா வாஸ்கான்சிலோஸ் நூலகம் இரும்பு சட்டகம் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக, தொங்கும் தோட்டம் போல புத்தக

அலமாரிகள் மிதந்து கொண்டிருக்கும் தோற்றத்தில் இருக்கும்.

Image 1115820


6.ஸ்ட்ராஹோவ் மோனஸ்ட்ரி நூலகம் :

செக் குடியரசில் உள்ள பிராகுவேயில் உள்ள ஸ்ட்ராஹோவ் மோனஸ்ட்ரி நூலகம், 1679ம் ஆண்டு கட்டப்பட்டது. 16ம் மற்றும் 18ம் நூற்றாண்டுக்கு மத்தியில் பதிக்கப்பட்ட

பல புத்தகங்களுக்கு தாயகமாக விளங்குகிறது.

7.பைபிலியோடெகா ஸ்டாடேல் :

இத்தாலியில் உள்ள பைபிலியோடெகா ஸ்டாடேல் நூலகம், 1566ம் ஆண்டில் துவங்கப்பட்டது. இந்த நூலகத்தில் ஏராளமான பழமையும், புதுமையும் கலந்த கட்டடக்கலை

அமைப்பில் அமைந்துள்ளது.

8. தியாஜின் பின்ஹாய் நூலகம் :

சீனாவில் அமைந்துள்ள இந்த நூலகத்தில் கோள வடிவில் ஆடிட்டோரியம், ஏராளமான கல்வி தொடர்பான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

Image 1115821


9. ஸ்டாக்ஹோம் பொது நூலகம் :

ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் பொது நூலகம் 1928ம் ஆண்டு துவங்கப்பட்டது. எளிமை, நேர்த்தி மற்றும் செயல்பாட்டின் கலவையாக இந்த நூலகம் விளங்குகிறது.

10. தமா ஆர்ட் பல்கலை நூலகம் :

ஜப்பானில் அமைந்துள்ள இந்த நூலகம், குறைந்த இருக்கை, கண்ணாடி சுவர்கள் மற்றும் வளைவான கட்டட அமைப்புடன் அமைந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us