/
ஸ்பெஷல்
/
அறிந்துகொள்வோம்
/
பிரிட்டனில் சிரிப்பு வாயு பயன்படுத்த தடை ஏன்?
/
பிரிட்டனில் சிரிப்பு வாயு பயன்படுத்த தடை ஏன்?
UPDATED : செப் 30, 2023 07:40 AM
ADDED : செப் 29, 2023 07:36 PM

பிரிட்டனில் சிரிப்பு வாயு என்றழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்சைடை போதை பொருளாக பயன்படுத்துவோருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க வகை செய்யும் புதிய சட்டம் அமலுக்கு வரவுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இளைஞர்கள் மத்தியில் சிரிப்பு வாயு என்றழைக்கப்படும்
நிறமற்ற, மணமற்ற வாயுவான நைட்ரஸ் ஆக்சைடு, சட்டவிரோதமாக போதைப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அங்குள்ள பார்கள், இரவு விடுதிகளுக்கு வெளியே உலோக குப்பிகளில் அடைத்து விற்கப்படுகிறது. குறிப்பாக அங்கு கஞ்சாவுக்கு அடுத்தப்படியாக, 16 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில், சாதாரணமாக பயன்படுத்தப்படும் போதைப்பொருளாக மாறியுள்ளது.
இதனை தொடர்ந்து சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு, அதிகரிக்கும் சமூக
விரோத செயல்களை கட்டுப்படுத்த நைட்ரஸ் ஆக்சைடு பயன்பாட்டுக்கு தடை விதிக்க
பிரிட்டன் அரசு முடிவு செய்தது. பிரிட்டன் கீழவையில் கொண்டு வரப்பட்ட தடை
மசோதா, 404 எம்.பிக்கள் ஆதரவுடன் நிறைவேறியது.
![]() |
இதன்படி, நைட்ரஸ் ஆக்சைடு சி வகை போதைப்பொருளாக வகைப்படுத்தப்படுகிறது.
இதனை போதைப்பொருளாக பயன்படுத்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது
அபராதமும், விற்பனை முகவர்களுக்கு 14 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படுமென
கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக பிரிட்டன் மேலவையில் சட்டமசோதா நிறைவேற்றப்பட
உள்ளது.
நைட்ரஸ் ஆக்சைடு தடைக்கு எதிராக ஸ்காட்டிஷ் நேஷனல் கட்சி ,பார்லியில் ஓட்டளித்தது. பொது சுகாதாரம் தொடர்பான பிரச்னையில் உங்கள் விருப்பத்திற்கு கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியாதென தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
![]() |
இந்தாண்டு இறுதியில் சிரிப்பு வாயு பயன்படுத்த தடை அமலுக்கு வரும். இருப்பினும், மருத்துவ காரணங்களுக்காக, குறிப்பாக பிரசவத்தின் போது மற்றும் வணிக நோக்கங்களுக்காக நைட்ரஸ் ஆக்சைடை பயன்படுத்த அனுமதி தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.