தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறிந்துகொள்வோம்/உங்கள் செல்ல நாய்க்கு கொடுக்கக் கூடாத உணவுகள்...

உங்கள் செல்ல நாய்க்கு கொடுக்கக் கூடாத உணவுகள்...

உங்கள் செல்ல நாய்க்கு கொடுக்கக் கூடாத உணவுகள்...


UPDATED : மே 13, 2023 07:20 PM

ADDED : மே 13, 2023 07:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2023 07:20 PM ADDED : மே 13, 2023 07:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செல்லப்பிராணியாக பல வீடுகளில் நாய் வளர்க்கப்படுகிறது. நாய்களுக்கென்று பிரத்யேகமாக உணவுகள் உள்ளன. அதே போல தவிர்க்க வேண்டிய உணவுகளும் உள்ளன. மனிதர்கள் உண்ணும் நிறைய உணவுகள், நாய்க்கும் உணவாக வழங்கப்படுகிறது. அந்த ஒரே ஒரு துண்டு சாக்லேட் கேக்கை எனக்குக்கொடு என்ற பாவனையில், பாவமான தோற்றம் கொண்டு, உங்கள் முகத்தையே பார்த்து உங்கள் மனதை இலக வைக்கும் திறன் நாய்க்கு உள்ளது. ஆனால், மனிதர்களின் பல உணவுகள் நாய்களுக்கு ஆபத்தானது என்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் நாய்களுக்கு கொடுக்கக் கூடாத உணவு வகைகளில் பட்டியலை இங்கே காணலாம்.

சாக்லேட்


சாக்லேட்டின் சுவை நமக்கு எவ்வளவு பிடித்தமானதோ, அதேபோல செல்ல நாய்களுக்கும் அவை பிடிக்கும். ஆனால், நமக்கு எந்த ஆபத்தும் ஏற்பட போவதில்லை. ஆனால் சாக்லேட்டில் உள்ள தியோப்ரோமைன் என்ற பொருள் செல்ல நாய்களுக்கு செரிமான கோளாறுகளை ஏற்படுத்துவதோடு, விஷமாகவும் மாறிவிடும். மேலும் ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, மயக்கம், ஏன் சில சிக்கலான நேரத்தில் இறப்பையும் கூட ஏற்படுத்தலாம்.

திராட்சை மற்றும் உலர் திராட்சை


நாய்களுக்கு கொடுக்கும் போது கண்டிப்பாக நோ சொல்ல வேண்டிய உணவுகளின் லிஸ்ட்டில் முதலில் இருப்பது திராட்சை மற்றும் உலர் திராட்சை. மிகச் சிறியளவில் நாய்கள் அவற்றை உட்கொண்டாலும், சிறுநீரகங்களை செயலிழக்க செய்துவிடும். மேலும், நீரிழப்பு, ஒவ்வாமை மற்றும் மந்த நிலை ஏற்படும்.

வெங்காயம் மற்றும் பூண்டு


Image 1111659
நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் வெங்காயம், பூண்டு கண்டிப்பாக இருக்கும். இவை நமக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என்றாலும் செல்லப்பிராணிகளுக்கு பேராபத்தாக மாறலாம். இவை நாய்களின் சிவப்பு ரத்த அணுக்களை சேதப்படுத்தக்கூடும். இத்துடன் ஒவ்வாமை, சுவாச பிரச்னை, பலவீனம் ஆகிய அறிகுறிகளுடன் ரத்த சோகைக்கு வழிவகுத்து விடும்.

அவகாடோ மற்றும் பருப்புகள்


அவகாடோ மற்றும் பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் மனிதர்களுக்கு மட்டுமே ஆரோக்கியமானவை செல்லப்பிராணிகளுக்கு அல்ல. இவற்றில் உள்ள பெர்சின், நாய்களுக்கு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, மூச்சுத்திணறல் மற்றும் குடல் அடைப்புக்கு வழிவகுக்கும்.

பச்சை முட்டை


முட்டை ஆரோக்கியமாக தான் ஆனால், அவை முழுமையாக சமைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அது ஆரோக்கியமானது. சிலர் முட்டையை சமைக்காமல், பச்சையாக நாய்களுக்கு அளிப்பர் இது நாய்களுக்கு முற்றிலும் ஆபத்தானது. அவற்றின் உடலில் பயோட்டின் குறைபாட்டை ஏற்படுத்தி, கொத்து கொத்தாக முடி உதிர்வை ஏற்படுத்தும், மேலும் செரிமானக் கோளாறுகள், சரும பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.

பால் மற்றும் பால் பொருட்கள்


Image 1111660
பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் சத்து அதிகம் இருந்தாலும், செல்ல பிராணிகளுக்கு கொடுப்பதை தவிர்க்கத்தான் வேண்டும். இவை செல்ல நாய்களுக்கு ஒவ்வாமை, செரிமானக் கோளாறு, வாயுத்தொல்லை, வீக்கம், அடிவயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கையும் ஏற்படுத்தும்.

மனிதர்கள் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் ஆல்கஹால், சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள், பிரட் போன்ற பேக்கரி ஐட்டங்கள், தக்காளி மற்றும் உருளைக்கிழங்குகளை செல்ல நாய்களுக்கு கொடுப்பதை நிறுத்துங்கள். அவை அவற்றின் ஆரோக்கியத்துக்கு உகந்தவை அல்ல.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us